தமிழ் மொழியில் படியுங்கள்

இன்றைய காலகட்டத்தில் அனைத்து விடயங்களும் சமூக ஊடகங்களின் ஊடாகவே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. உங்கள் தயாரிப்பை விளம்பரப்படுத்த வேண்டுமா? Brand தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்க வேண்டுமா? வணிக உலகில் உங்களுக்கான ஒரு  அடையாளத்தை பதிக்க வேண்டுமா? சமூக ஊடகங்களைப் பயன்படுத்துங்கள். இன்றைய சூழலில் நல்லதொரு தொடக்கத்திற்கு சமூக ஊடகமே முன்னோடியாக உள்ளது. சமூக ஊடகத்தை கையாள்வது என்பது இலகுவான காரியமல்ல. அந்தவகையில் நாம் தற்போது likes மற்றும் comments எவ்வாறு கையாளலாம் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

சமூக ஊடகங்களின் நிலையை மிகச்சரியான முறையில் நிறுவுவதற்கான வழிமுறைகளென்று எதுவும்  வரையறுக்கப்படவில்லை.  எனினும், பரிசோதிக்கப்பட்ட மற்றும் முயற்சித்த சில வழிமுறைகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

1) எப்போதும் செயலில் இருக்க வேண்டும் (Be Active):  

உங்களுக்கு யாரேனும் உடனடியாக பதிலளிப்பதை விரும்புவீர்களல்லவா? ஆமாம், அவ்வாறு செய்வதனால்  உங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்ற  உணர்வைப்பெறுகிறீர்கள்.  உங்களைப்போலவே மற்றெல்லோரிடமும் இவ்வுணர்வு காணப்படும். ஆகவே, comments மற்றும் messages ற்கு உடனடியாக  பதிலளியுங்கள்.

2)உங்கள் பார்வையாளர்களுடன் தொடர்புகொள்ளுங்கள் (Relate to your audience) 

 தற்போது என்ன நடக்கிறது என்பதில் கவனம் செலுத்துங்கள்.  மிகைப்படுத்தலின்  மூலம்  பார்வையாளர்களுடனான தொடர்பாடலை  மேற்கொள்வதில் கவனம் செலுத்துங்கள். Memeகளை முயற்சி செய்து பாருங்கள். 

3) மிக துல்லியமாக செயல்படுங்கள் (Be Accurate)

நாங்கள் அனைவரும் போலியான விளம்பரங்களை பார்த்துள்ளோம் அல்லவா?  உதாரணமாக,  நீங்கள்  ஒரு மில்லியன் டொலர்களை வென்றுள்ளீர்கள்!!  நீங்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்!! அல்லது நாட்டில் சிறந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்!! போன்ற நுட்பமான விளம்பரங்கள். உங்களுக்கு நான்  ஒரு  அறிவுரையை வழங்க விரும்புகின்றேன்.  நீங்களும் இதைப்போன்று  விளம்பரம் செய்ய எண்ணினால், தயவு செய்து அவ்வாறு செய்யாதீர்கள்!

 

ஒட்டுமொத்தமாக, சமூக  ஊடகங்கள் என்பது ஒரு சிக்கலான வலையமைப்பாகும். எனினும், உங்களுக்கான ஒரு இடத்தை பெற்றுக்கொள்வது கடினம் அல்ல. மேற்கூறிய மூன்று வழிமுறைகளை கடைப்பிடியுங்கள். அதேவேளை, புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதில் என்றும் தயங்க வேண்டாம். 

தமிழ் மொழியில் படியுங்கள்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here