English (ஆங்கிலம்) தமிழ் மொழியில் படியுங்கள்

முறையற்ற நடைமுறைகளால் தற்போதைய வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும்  நிலையில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க வணிகங்கள் பெரும்பாலும் தங்கள் ஆற்றல், நேரம் மற்றும் பணத்தை செலவிட வேண்டியிருக்கும். வாடிக்கையாளர்களை தக்க வைப்பதற்குரிய செலவானது புதிய வாடிக்கையாளர்களை உள்வாங்குவதற்குரிய  செலவினை போல அதிகமானதல்ல என்பதனை  திறமைமிக்க தொழில் முனைவோர் விரைவாக புரிந்துகொள்கிறார்கள். நீங்கள் தொடர்ந்து நல்ல வாடிக்கையாளர் சேவையை வழங்காவிட்டால், உங்கள் வாடிக்கையாளர்கள் உங்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க மாட்டார்கள் என்பது நீங்கள் அறிந்த விடயமே. எனவே, ஆக்கபூர்வமான விமர்சனங்களை சேகரிப்பதற்கும், பொதுவாக புகாரளிக்கப்பட்ட சிக்கல்களை மறுபரிசீலனை செய்து கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பிற்காகவும் வாடிக்கையாளர் திருப்தி கணக்கெடுப்புகளை மேற்கொள்வது சிறந்த நடைமுறையாகும்.

வாடிக்கையாளர் திருப்தி கணக்கெடுப்புகள், எவை வாடிக்கையாளர்களை அதிருப்தியடையச் செய்கிறது மற்றும் எவ்வாறு விடயங்களை சிறப்படையச் செய்வது ஆகிய புரிதலை மேம்படுத்துவதற்கான சிறந்த கருவியாக இருக்கும். எனவே, உங்கள் கணக்கெடுப்பில் நேர்மறை மற்றும் எதிர்மறை உணர்வுகள் பற்றிய குறிப்பிட்ட தகவல்கள் இருப்பது முக்கியம், அவை உங்கள் வாடிக்கையாளர்களின் உணர்ச்சிபூர்வமான பதில்களை புரிந்துகொள்வதற்கான இடத்தை உருவாக்கும்.

வெற்றிகரமான வாடிக்கையாளர் திருப்தி கணக்கெடுப்பு படிவத்தை உருவாக்க 7 பயனுள்ள உதவிக்குறிப்புகள் பின்வருமாறு:

  1. சுருக்கமாகவும் எளிமையாகவும் வைக்கவும்
  2. நிலையான மதிப்பீட்டு அளவீடுகளை உருவாக்குங்கள்
  3. முன்னணி கேள்விகளைத் தவிர்க்கவும்
  4. ஆம் / இல்லை கேள்விகள் நிறைய கேளுங்கள்
  5. அனுமானங்களைத் தவிர்க்கவும், உங்கள் கேள்விகளில் தெளிவாக இருங்கள்
  6. நீங்கள் கொடுத்த தேர்வுகளை மட்டுமே பயன்படுத்தி பதிலளிக்குமாறு கட்டாயப்படுத்துவதை விட, வாடிக்கையாளர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள திறந்த கேள்விகளை பயன்படுத்தவும்
  7. உங்கள் கணக்கெடுப்பை மேற்கொள்ள உதவும் வாடிக்கையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும். இது சிலசமயம் எதிர் விளைவுள்ள நிகழ்வுகளாக வரக்கூடும், எனவே உங்கள் விவேகத்தை பயன்படுத்துங்கள்!

உங்கள் கணக்கெடுப்பில் நீங்கள் சேர்க்க வேண்டிய கேள்விகளின் தொகுப்பு உங்கள் வணிகம் மற்றும் அதன் நோக்கத்தைப் பொறுத்து மாறுபடலாம். அதிர்ஷ்டவசமாக Survey Monkey, Zoho Survey, Google Forms மற்றும் Key Survey ஆகிய ஆன்லைன் கருவிகள் கணக்கெடுப்பை குறைவான சவால்களுடன் கட்டமைக்க சிறந்த நுண்ணறிவுகளையும், templates களையும் வழங்குவதன் மூலம் இன்று முழு செயல்முறையையும் எளிதாக்கியுள்ளன.

உங்கள் கணக்கெடுப்பின் கேள்விகளை உருவாக்குவதில் இந்த உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்தி, உங்கள் வணிகத்தின் மீது உங்கள் வாடிக்கையாளர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக அல்லது மகிழ்ச்சியற்று இருக்கிறார்கள் என்பதை நன்கு கண்டறிந்து, அவர்களுக்கு எவ்வாறு சிறப்பாக சேவை செய்ய முடியும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். 

English (ஆங்கிலம்) தமிழ் மொழியில் படியுங்கள்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here