ஒரு பலமான அணியொன்றை கட்டியெழுப்புவதற்கு செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை

உங்களுடைய வேலைத்தளத்தில் குழுவை கட்டியெழுப்புவதன் அவசியம் என்ன? 

0
36

English (ஆங்கிலம்) தமிழ் மொழியில் படியுங்கள்

ஒரு பணியிடத்தில் ஒரு சீரான குழுவை உருவாக்குவதற்கு முயற்சி செய்வது ஏன் மிகவும் முக்கியமானது என்று நீங்களே உங்களை கேட்டிருப்பீர்கள்.

ஒரு நொடி உங்களை Mark Zuckerberg இன் நிலையில் இருந்து கற்பனை செய்து பாருங்கள். பேஸ்புக் முற்றிலும் அவரது யோசனை என்பது உண்மைதான், அது அவருடைய முன்முயற்சி என்பது உண்மைதான். ஆனால், அவருடைய கடின உழைப்புடைய குழு மற்றும் அவர்களின் திறன்கள் இருக்காவிட்டால் அவரது கண்டுபிடிப்பு உலகெங்கிலும் உள்ள பலரின் கைகளை எட்டியிருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது எல்லா வேலைகளையும் அவரால் தான் கையாள முடியுமா?

ஆகவே, எப்போதும் உங்கள் நிறுவனத்தில் வேலைகளை தொடர்ந்து வெற்றிகரமாக செய்வதற்கு முதுகெலும்பாக இருப்பது உங்கள் குழுவே. இதனால்தான், ஒரு ஆக்க வளமுடைய குழு நிறுவனமொன்றிற்கு அவசியம். இனி நாம் ஒரு குழுவை கட்டியெழுப்புவதற்கு செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத விடயங்களை பற்றி பார்ப்போம்.  

எப்போதும் இவற்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்,

  • தெளிவான நோக்கங்களை கொண்டிருக்க வேண்டும் 

குழு ஒரு தெளிவான குறிக்கோளை நோக்கியே செல்ல வேண்டும். அக் குறிக்கோளை அடைவதற்கு கையாளக்கூடிய வழிகள் மற்றும் முன்னெடுக்கும் முறைகள் வித்தியாசமானவையாக இருந்தாலும், இறுதியில் நிறுவனத்தினதும் உங்கள் குழுவினதும் குறிக்கோளை சென்றடைய வேண்டும். ஆனால், ஒரு நபர் அல்லது ஒரு குழுவினர் தீவிர நடவடிக்கைகளை எடுக்கும் சூழ்நிலைகள் வரும்போது, அவற்றை அணியின் மற்றவர்களால் சகித்துக்கொள்வதற்கு கடினமாக இருக்கக்கூடும். ஒரு அணியாக செயற்படும்போது இந்த சிதறல் தன்மை எப்போதும் தவிர்க்கப்பட வேண்டும். இந்த சூழ்நிலைகளை சமநிலைப்படுத்த ஒரு குழுத்தலைவரை நியமிப்பது உதவியாக இருக்கும்.

  • தனிநபரின் ஆற்றல்களை விருத்தி செய்தல்

தனிநபரினுடைய திறமைகளையும் ஆற்றல்களையும் விருத்தி செய்யும் போதே திறன்மிக்க அணிகள் ஒன்றாக வளர்கின்றன. ஆகவே, ஒரு குழுவில் பல்வேறுபட்ட திறமைகளைக் கொண்ட உறுப்பினர்கள் இருப்பார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இவ் உறுப்பினர்களின் திறன்களை கண்டறிந்து மேலும் அவற்றை விருத்தி செய்ய உதவ வேண்டியது ஒரு குழுவினுடைய பொறுப்பாகும். ஏனென்றால், அந்த திறமைகள் தான் அணியை தொடர்ந்து முன்னேறிச்செல்ல வழிவகுக்கின்றன.  

  • பயன்மிக்க தொடர்பாடல்

குழுவை ஒன்றாக இணைக்க வேண்டும். குழுவில் எவருக்காவது ஒரு யோசனை அல்லது கேள்வி கேட்க வேண்டியிருந்தால், அனைவருடனும் தொடர்பாடக் கூடியதாக இருக்க வேண்டும். முடிந்தவரை அணிக்குள்ளான தொடர்பு சீராக இருக்க வேண்டும். இது அணியின் ஒத்துழைப்பையும் செயல்திறனையும் மேம்படுத்தும். தகவல்தொடர்பு என்பது குழு உறுப்பினர்களுக்கும் உங்களுக்கும் அல்லது பிற தலைவர்களுக்கும் இடையிலும் வழக்கமாக நடக்க வேண்டியவற்றை குறிக்கிறது. இது முடிந்தவரை திறந்த மற்றும் வெளிப்படையானதாக, முடிந்தவரை வழக்கமானதாக அணியை ஈடுபடுத்திக்கொள்ளும்முகமாக இருக்க வேண்டும் மற்றும் தீர்க்கப்படவேண்டிய ஏதேனும் பிரச்சினைகளை தலைமைத்துவத்தினர் அறிந்துகொள்வதாகவும் இருக்க வேண்டும்.

  • குழுவினர் தொழிற்படுவதற்காக பாதுகாப்பான இடம்

பாதுகாப்பான இடம் என்றால், பௌதிக ரீதியாக பாதுகாப்பு வழங்கக்கூடிய இடம் என்று அர்த்தமல்ல. குழு உறுப்பினர்களுக்கு இடையில் பௌதிக பாதுகாப்பு இருக்க வேண்டியது முக்கியம். ஆனால், அணியினர் மத்தியில் நல்லெண்ணம் நிலவியிருப்பதும் சம அளவில் முக்கியமானதாகும். இது பணியிடத்தை மேலும் ஈடுபாடு உடையதாகவும் மற்றும் புதிய சிந்தனைகளுக்கும் வழிவகுக்கும். பிறரது சுதந்திரத்திற்கு இடையூறாக இருக்காமல், தன் சொந்த எல்லைக்குள் சுதந்திரமாக செயற்படும்பொழுது மக்கள் தங்களை வெளிப்படுத்துவதில் பாதுகாப்பாக உணருவார்கள். நீங்கள் தலைவர் என்ற ரீதியில் திறந்த மற்றும் ஆதரவான கலாச்சாரம், தேவைப்படும்போது உங்கள் சந்தேகங்களையும் பாதிப்புகளையும் காண்பிப்பதில் ஆறுதல் போன்றவற்றை உருவாக்குவதற்கான பொறுப்பின் பெரும்பகுதியை கொண்டுள்ளீர்கள்.

  • ஆதிக்கம் இல்லாத வலுவான தலைமைத்துவத்தை நிறுவுதல்

தலைமைத்துவம் என்பது அதிகாரத்தை சர்வாதிகார வழியில் திணிப்பதில்லை. எப்போதும் புதிய யோசனைகளுக்கு நல்ல வரவேற்பையும் அனைவருக்கும் சம உரிமையும் வழங்க வேண்டும். உங்கள் குழு தலைவர்கள் ஒரு சிறந்த முன்னோக்கத்திற்காகவே வழிநடத்தப்படுகின்றனர் என்பதனை நினைவூட்டுங்கள். 

  • குழு மிகப்பெரியதாக இருக்கக்கூடாது

சரியான எண்ணிக்கையை தீர்மானிப்பது ஆபத்தானதும் கடினமானதும் ஆகும். ஒரு உணவை சமைக்க நிறைய சமையல்காரர்கள் இருந்தால், இறுதியில் உணவு நாசமாகிவிடும் அல்லவா? பல ஆராய்ச்சிகள் இந்த தலைப்பில் நடத்தப்பட்டுள்ளன, அதில் பெரும் போராளிகள் பின்பற்றிய ஒருமித்த கருத்து என்னவென்றால், 3 மற்றும் 6 அல்லது 8 வரையான எண்ணிக்கையே மிகவும் செயல்திறனுடைய அணிகளின் அலகாகும்.

  • பன்முகத்தன்மை கொண்டாடப்பட வேண்டும், மேலும் தீவிரமாக பாதுகாக்கப்பட வேண்டும்

“குழு சிந்தனை” நிறைய ஆய்வு செய்யப்பட்டுள்ளது, ஏனெனில் இது வணிகத்திலும் வாழ்க்கையின் பிற துறைகளிலும் மிகவும் பேரழிவு தரும் சில முடிவுகளுக்கு பொதுவானது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு குழுவிற்கு ஒரு வழியில் தீர்வு காண்பது முக்கியம் என்றாலும், யாரும் ஒருபோதும் மிகவும் ஒத்துழைப்பாக இருக்கமாட்டார்கள். அதாவது மக்கள் ஒத்திசைவான குறுக்குவழிகளை எடுக்கத் தொடங்குகிறார்கள், மேலும் அவர்கள் இருக்கும் சூழலுக்கு வெளியே சிந்திக்கமாட்டார்கள்.

இதன் ஒரு பகுதி அணியின் பன்முகத்தன்மையிலிருந்து வருகிறது. அவர்கள் வெவ்வேறு வாழ்க்கைமுறைகள், கல்விப் பின்னணி, வயது, அனுபவம் போன்றவற்றில் இருந்து வருகிறார்களா? அணி மிகவும் மாறுபட்டதாக இருந்தாலும், அவர்கள் நீண்டகாலம் மாறாமல் ஒன்றாக வேலை செய்தால் அவர்கள் ஒரே மாதிரியாக சிந்திக்கத் தொடங்குவார்கள். இது ஒத்திசைவு மற்றும் ‘குழு முயற்சி’ ஆகியவற்றை விளைவிக்கிறது. இனம் இனத்தை சேரும் என்பது உண்மைதான். ஆனால், ஒரு அணிக்குள்ளேயே அவர்களின் தனித்தன்மை மிகவும் முக்கியமானது, ஏனெனில் பன்முகத்தன்மையே ஒரு அணியினை தனித்துவமாக்குகின்றது மற்றும் இதை இழப்பது ஒருபோதும் நல்ல விஷயம் அல்ல. இத்தகைய அணிகளை “தூண்டிவிடுவதும்” முக்கியம், மேலும் குழுக்களுக்கு இடையில் சில இயக்கங்களையும், இளைய நபர்களை அணிகளாக மாற்றுவதனாலும் அவர்களை குழு சிந்தனை எல்லைக்குள் மட்டும் இருப்பதனை தடுக்கமுடியும்.

உண்மையிலேயே ஒத்துழைப்புடைய, தொடர்ந்து உயர் மட்டத்தில் செயல்படும் ஒரு சிறந்த அணியை உருவாக்குவது அறிவியலை விட கிட்டத்தட்ட கலை போன்றது மற்றும் பெரும்பாலும் நிறைய அதிர்ஷ்டங்களை உள்ளடக்கியது. சரியான நேரத்தில் சரியான நபர் வேலைக்கு தெரிவாகிறாரா, சரியான நபர்கள் உள் இயக்கங்களுக்கு தயாராக உள்ளார்களா, ஒரு குறிப்பிட்ட பணிக்காக நீங்கள் இருக்க வேண்டிய நிலைக்கு அணியும் தனிநபர்களும் வளர்ச்சியடைந்துள்ளார்களா? நாங்கள் விவாதித்தவற்றை மனதில் வைத்திருப்பது மேலாளர் மற்றும் குழு கட்டமைப்பாளராக உங்கள் வாழ்க்கையை எளிதாக்குகிறது மற்றும் உங்கள் குழுவை மேலும் வலுவானதாக்கும்.

English (ஆங்கிலம்) தமிழ் மொழியில் படியுங்கள்