spot_imgspot_img

பங்கு மூலமான நிதி

எளிமையான சொற்களில், பங்கு மூலமான நிதி என்பது பங்குகளை விற்பதன் மூலம் பணம் திரட்டுவதைக் குறிக்கிறது. பங்குகளை விற்பது என்பது நிறுவனத்தின் உரிமையாண்மையானது பணத்திற்கு ஈடாக விற்கப்படுகிறது. இது பல காரணங்களுக்காக நிறுவனங்களால் பயன்படுத்தப்படலாம். பெரிய அளவிலான சொத்துக்களை வாங்குவதற்கு நிதி திரட்டுவது இதில் பொதுவானது. புங்கு மூலமான நிதி என்பது தொழில்முயற்சியாளரின் தொடர்புகளாக இருக்கும் பல மூலங்களில் இருந்து வரலாம். பங்கு மூலமான நிதி நடவடிக்கைக்கு முன் முறையான தொழில்முறை ஆலோசனையைப் பெறுவது மிகவும் முக்கியம். “பங்கு மூலமான நிதி” என்ற சொல் பொதுவாக ஒரு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது தனியார் நிறுவன நிதிக்கும் பொருந்தும்.

உங்கள் வணிகத்தை சரியாக மதிப்பிடுவது, பங்கு மூலமான நிதிக்கு வரும்போது கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கியமான பகுதியாகும். இங்குள்ள பிரச்சினை என்னவென்றால், ஒரு வணிகத்தை மதிப்பிடுவதற்கு பல வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதாகும். மேலும், அது ஒருபோதும் துல்லியமாக மதிப்பிடப்படவில்லை என்று நீங்கள் உணரலாம். எனினும், முதலீட்டாளர் உங்கள் வணிகத்திற்காக எவ்வளவு பணம் செலுத்தத் தயாராக இருக்கிறார் என்பதை மனதில் வைத்து, இந்த நோக்கத்திற்காக வழிமுறைகளின் ஒரு கலவையைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. எனவே, வெளித்தரப்பினர் தமது சொந்த மதிப்பீட்டை எவ்வாறு செய்வார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்வது முக்கியம். பொதுவாக, இது இரண்டு வழிமுறைகளில் செய்யப்படுகிறது. முதல் வழி அனைத்து சொத்துக்களின் சந்தை மதிப்பை ஒன்றுசேர்த்து மேற்கொள்ளப்படுகின்றது. 

இரண்டாவது வழிமுறையானது சாத்தியமான எதிர்கால இலாபத்தை மதிப்பிட முயற்சிப்பதாகும். நீங்கள் கணிசமான முதலீட்டை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், தொழில்முறை ஆலோசகரின் உதவியை நாடுவது ஆலோசிக்கத்தக்கது. வங்கிகள் மற்றும் நிதி ஆலோசனை மற்றும் சந்தை ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்த சேவைகளை வழங்குகின்றன. உங்கள் சாத்தியமான முதலீட்டாளர்கள், குறிப்பாக அவர்கள் நிறுவன முதலீட்டாளர்களாக இருந்தால், அவர்களது தமது சொந்த பகுப்பாய்வையும் செய்வார்கள். இருப்பினும், உங்கள் பலம் மற்றும் பலவீனங்களைப் பற்றி நன்கு புரிந்துகொள்வது உங்கள் நலனை நிலைநாட்ட உதவுவதுடன், இதுவே இறுதியில் பேச்சுவார்த்தையின் மையப்புள்ளிகளாக மாறும்.

இவை அனைத்தும் பகுத்தறிவு மற்றும் ஆவணரீதியாக நன்றாகத் தெரிந்தாலும், நீங்கள் எவ்வளவு சிறப்பாக பேரம் பேசுபவர் என்பதைப் பொறுத்தே அனைத்தும் அமையும். நீங்கள் வற்புறுத்துகிறீர்கள் என்பதையும், நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பதையும், உங்கள் சாத்தியமான முதலீட்டாளர்களைச் சந்திக்கச் செல்லும்போது நீங்கள் அனைத்திற்கும் நன்கு தயாராக இருக்கிறீர்கள் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பங்கு மூலமான நிதி என்பது இரண்டு தரப்பினரும் நிதிக்கு ஈடாக பங்குகளை வர்த்தகம் செய்யும் ஒரு நடவடிக்கை அல்ல என்பதை நீங்கள் மறந்துவிடலாம். இதில் செல்வாக்கு செலுத்தும் மற்ற காரணிகளும் உள்ளன. உதாரணமாக, ஒரு பங்கை வாங்கியவுடன், முதலீட்டாளர் வாக்களிக்கும் உரிமையைப் பெறுகிறார், பங்கு இலாபத்தொகைக்கான உரிமைகள் மற்றும் எதிர்கால பங்குதாரர்களின் உரிமைகளை மாற்றுவதற்கான உரிமையும் கூட அவருக்கு உள்ளது. அடிப்படையில், முதலீட்டாளர் வணிகம் எவ்வாறு முன்னெடுக்கப்படுகிறது என்பதில் தனது கருத்தைக் கூறும் திறனைக் கொண்டிருப்பார் என்பதே இதன் பொருள். அதிக மதிப்புள்ள வணிகத்தில் கட்டுப்பாடற்ற பங்குகளை வைத்திருப்பதா அல்லது ஒப்பீட்டளவில் சிறிய வணிகத்தில் கட்டுப்படுத்தும் பங்குகளை வைத்திருப்பதா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டிய நிகழ்வுகள் இருக்கலாம்.

சரியான ஒப்பந்தத்துடன் வெளிவருவது ஒரு தந்திரமான வணிகமாகும். எல்லாவற்றையும் இருமுறை சரிபார்த்து, ஒருவேளை உங்கள் சட்ட ஆலோசனை அணியால் மூன்று முறை சரிபார்த்து, மிக முக்கியமான அனைத்து சரத்துக்களையும் சேர்த்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வணிகத்தின் உரிமையின் நியாயமான விகிதத்துடன் நிதியின் அளவு இணங்கிப் போகும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். இதனால் பணம் கைமாறும். இந்த ஒப்பந்தத்தில் வணிக ஆலோசனை அல்லது முதலீட்டாளரால் வழங்கப்பட்ட பிற வணிக ஆதரவு செயல்பாடுகளுக்கான அணுகல் ஆகியவை அடங்கும், இது பணத்தைப் போலவே மதிப்புமிக்கதாக இருக்கலாம். இந்த ஒப்பந்தங்கள் துறைக்கு துறை மாறக்கூடிய ஒழுங்குமுறை தேவைகளுக்கும் இணங்க வேண்டும்.

செய்ய வேண்டியவை

  • உங்கள் வணிகத்தைப் பற்றி நீங்கள் அறிந்த அளவுக்கு வேறு எவரும் அறிய மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
  • உங்கள் வணிகத்திற்கு மிகவும் பொருத்தமான மதிப்பீட்டு முறைகளில் தொழில்முறை ஆலோசனை உதவியைப் பெறுங்கள்
  • முதலீட்டாளருக்கு வழங்க நீங்கள் தயாராக உள்ள பங்குகள் மற்றும் அவற்றின் உரிமைகளை கவனமாக பகுப்பாய்வு செய்யுங்கள்
  • பேச்சுவார்த்தைகள் உங்கள் வணிகத்திற்கு சாதகமாக உள்ளதா என்பதில் எச்சரிக்கையாக இருங்கள்
  • நேர்மையாக இருங்கள் மற்றும் நேர்மறை மற்றும் எதிர்மறையான பதில்களைப் பெற தயாராக இருங்கள்
  • சில முதலீட்டாளர்கள் தொடர்புகள் மற்றும் அறிவு போன்ற கூடுதல் நன்மைகளை கொண்டு வர முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

செய்யக்கூடாதவை

  • முதலீட்டாளர்களிடமிருந்து வரும் ‘குறைந்த’ தொடக்க விலைகூறல்களால் மனம் தளராதீர்கள்
  • நிதி/சட்ட ஆலோசகர் இல்லாமல் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டாம் (குறைந்தபட்சம் யாரையாவது முன்கூட்டியே ஆலோசிக்கவும்)
  • உண்மைத் தரவுகளால் நிரூபிக்க முடியாத கணிப்புகள்/வாக்குறுதிகளை பெரிதுபடுத்தாதீர்கள் அல்லது வழங்காதீர்கள்
  • கட்டுப்படுத்தும் பங்குக்கு ஈடாக இலாபகரமான சலுகைகளால் உடனடியாக ஈர்க்கப்பட்டு விடாதீர்கள்
  • அவர்கள் முதலீடு செய்யப் போவது உங்கள் வணிகத்தின் மீது என்பதை மறந்துவிடாதீர்கள்
  • அவர்கள் உங்கள் வணிகத்திற்கு என்ன கூடுதல் ஆதரவை வழங்க முடியும் என்று கேட்க வெட்கப்பட வேண்டாம்

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X