English (ஆங்கிலம்) தமிழ் மொழியில் படியுங்கள்

குடும்ப வணிக நிர்வாகம் என்பது குடும்பத்தினுடைய நிர்வாகம் மற்றும் வணிகத்தினுடைய நிர்வாகம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய ஒரு பரந்த விடயப்பரப்பாகும். ஒரு குடும்ப வணிகத்தின் ஆரம்ப படிகளுக்கு தொழில் முனைவு ரீதியிலான நடைமுறைகள் பொருத்தமானதாக அமைந்தாலும் வணிகமானது விரிவடையும் போது ஒரு உத்தியோகபூர்வ நடைமுறை அவசியமாகின்றது.

ஹார்வர்ட் வணிக கல்லூரியினால் (Harvard Business School) அறிமுகப்படுத்தப்பட்ட மூவட்ட மாதிரி குடும்ப வணிக முறையானது (Three-Circle Model) குடும்ப வணிகத்தின் நிலைத்திருப்பில் கவனத்தை செலுத்தும் கட்டமைப்பாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுகிறது.  இது ஒரு குடும்ப வணிகத்தில் ஒன்றிலொன்று தங்கியுள்ள குடும்பம், உரிமம் மற்றும் வணிகம் ஆகிய மூன்று அமைப்புக்களை பிரதிபலிக்கின்றது.

பெரும்பாலான குடும்பங்களுக்கு குடும்ப வணிக சிக்கல்களை (உ+ம்: குடும்ப சீர்நிலை, அடுத்தடுத்த நிர்வாகிகள் பற்றிய சிக்கல்கள்) ஒரு சீரான முறையில் கலந்தாலோசிக்க வேண்டிய தேவை உள்ளது. இதற்கான பொருத்தமான இடங்களாக குடும்ப மன்றங்கள், குடும்ப ஓய்வுகள் மற்றும் குடும்ப கூட்டங்கள் அமைந்துள்ளன.

பட உபயம்: கேம்பிரிட்ஜ் குடும்ப நிறுவன குழு

 

 

குடும்ப மன்றம் என்பது ஒழுங்கமைக்கப்பட்ட சுய நிர்வகிப்புடைய, முக்கியமாக கொள்கை மற்றும் திட்டமிடல் பிரச்சினைகள் போன்ற ஒரு வணிகத்தின் மிகவும் சிக்கலான பிரச்சினைகளை கருத்திற்கொள்ளும் குழு ஆகும். இது ஒரு குடும்ப வணிகத்தின் வளர்ச்சி மற்றும் பொது மதிப்புகளுக்கு வழிவகுப்பதை நோக்காக கொண்டுள்ளது. இது நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குநர்கள் குழுவிலிருந்து தனித்து செயற்படுவதுடன் பங்குடைமையாளர்கள் கூட்டம் போன்றவற்றுடன் எந்தவித தொடர்பினையும் கொண்டிருப்பதில்லை. குடும்ப மன்றத்தின் செயற்பாடுகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:

  • குடும்ப உறுப்பினர்கள் எவ்வாறு வணிகத்தினுள் நுழைகிறார்கள் என்பதனை ஆராய்தல் 
  • குடும்ப சீர்த்தன்மையை உறுதிப்படுத்தல் 
  • குடும்ப வரலாற்றினை ஆவணமாக்குதல்

குடும்ப கூட்டங்கள் என்பன குடும்ப உறுப்பினர்களுக்கு குடும்பம் மற்றும் வணிகத்தின் நிலை பற்றிய தகவல்களை எடுத்துரைக்கும் உத்தியோகபூர்வ அமர்வு ஆகும். குடும்பம் மற்றும் வணிகம் ஆகிய இரண்டிலும் உள்ள சிக்கல்களை ஆக்கபூர்வமாக கலந்தாலோசிக்க இது ஒரு சிறந்த தளமாகும்.

குடும்ப ஓய்வு என்பது தூரப்பிரதேசங்களில் சில நாட்களுக்கு ஒழுங்கமைக்கப்படுவதாகும். இங்கு பயன்படுத்தப்படும் “ஓய்வு”(retreat) என்ற பதமானது “மீள பெறுவதற்கு”(to pull-back) என்ற பொருள் கொண்ட இலத்தீன் மொழி வினைச்சொல்லிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதாகும். இம்முறையானது குடும்ப உறுப்பினர்கள் களைப்பாறவும், சுதந்திரமாக மற்றும் ஊக்கத்துடன் இருக்க வழி சமைக்கும் சூழலாக அமைகின்றது. அத்துடன் அனைத்து விதமான பயனற்ற சிந்தனைகளிலிருந்து நீங்கி குடும்பம் மற்றும் வணிகம் சார்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்த வழிவகுக்கின்றது. 

மேற்கூறப்பட்டவை தவிர ஆலோசகர் குழு மற்றும் தொழில்முறை மேலாண்மை ஆகிய இரு முறைகளும் குடும்ப நிலையையும் செயற்றிறனையும் உயர்த்த வழிவகுக்கின்றது.  

ஆலோசகர் குழு 

வணிகமொன்றின் ஆரம்ப கட்டத்தில் அதன் அனைத்து அம்சங்களையும் நிர்வகிப்பவராக உரிமையாளர் காணப்படுவார். எனினும், வணிகம் அபிவிருத்தி அடையும் போது தேர்ச்சி பெற்றவர்களின் ஆலோசனை / கருத்துக்களை பயன்படுத்தல் முக்கியமானது. இதனை மேற்கொள்வதற்கான ஒரு வழிமுறையாக ஆலோசகர் குழு காணப்படுகின்றது. பெரும்பாலான குடும்ப வணிக உரிமையாளர்கள் நிறுவனத்தின் பரிணாமம் மற்றும் வளர்ச்சிக்கான சிறந்த படிமுறையாக இதனை கருதுகின்றனர்.

தொழில்முறை மேலாண்மை

சில சமயங்களில், ஒரு வணிகத்தின் உயர் நிலையிலிருக்கும் நபர் தகுதி இல்லாதவராக அல்லது தகுந்த அறிவினை கொண்டிராதவராகவோ அல்லது வணிக ரீதியான கலந்துரையாடல்களில் ஈடுபாடு அற்றவராகவோ காணப்படலாம். இது பணிபுரிவதற்கான கல்வி மற்றும் தொழில் ரீதியான தேர்ச்சி கொண்ட உத்தியோகத்தர்களை பணியமர்த்துவதற்கான முக்கியத்துவத்தை ஏற்படுத்துகின்றது. அவர்கள் நிறுவனத்தின் முழுமையான செயற்றிறன் விருத்தியிலும் வணிகத்தின் அனைத்து உறுப்பினர்களிடையிலும் சிறப்பான உறவினை ஒரு பாலமாக இருந்து பேணுவதிலும் உதவியாக அமைகின்றனர். இந்த ஆற்றலானது “பால–முகாமைத்துவம்(bridge-management)  என அறியப்படுகின்றது.

ஒரு சக்தி மிக்க குடும்ப நிர்வாக அடிப்படையை கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்கு அதிகளவான பொறுமை மற்றும் விடாமுயற்சி தேவைப்படுகின்றது. இது வணிகத்தின் நீண்ட பயணத்தில் குடும்பத்திற்கும் வணிகத்திற்கும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. குடும்ப நிர்வாகம் பற்றிய மேலதிக தகவல்களை அறிய, IFC Family Business Governance Handbook ஐ அணுகவும்.

English (ஆங்கிலம்) தமிழ் மொழியில் படியுங்கள்