spot_imgspot_img

குடும்ப வணிகத்தில் முறையான நிர்வாகத்தின் முக்கியத்துவம்

ஒரு குடும்ப வணிகத்தின் வெற்றி வணிகம் மட்டுமல்லாது, குடும்பத்தின் மாறிவரும் சூழல் இயக்கத்தைச் சுற்றியே உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் தங்கள் வாழ்க்கையின் சில பாகங்களுக்கு வணிகத்தைச் சார்ந்து இருந்திருக்கலாம், மேலும் வணிகத்திற்கும் பங்களித்திருக்கலாம். வணிகத்தில் ஏற்படும் எந்த மாற்றத்தின் வெற்றியும் அந்த மாற்றங்களுக்கு ஏற்ப குடும்ப உறுப்பினர்கள் தம்மை மாற்றிக்கொள்ளும் திறனைப் பொறுத்தது. இது நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்போது, குடும்ப வணிகமானது ‘உரிமையாளர்-மைய’ கட்டத்தில் இருந்து அனைத்து குடும்ப உறுப்பினர்களும் பணிப்பாளர் சபை அணியும் ‘இணைந்து செயல்படும்’ ஒரு சிக்கலான கட்டத்திற்கு நகர்கிறது.

ஒரு குடும்ப வணிகம் இந்த கட்டத்திற்கு நகரும் போது, அது உறவுகளையும் வணிகத்தின் நம்பகத்தன்மையையும் பாதுகாக்க ஒரு மூலோபாயத்தை நடைமுறைப்பபடுத்த உதவுகிறது. இது குடும்ப வணிகத்திற்குள் சிறப்பான நிர்வாகத்திற்கு இது இடமளிக்கின்றது. இது ஒட்டுமொத்த குடும்ப வணிக சுற்றுச்சூழல் கட்டமைப்பின் நீண்ட கால நிலைபேற்றினை உறுதி செய்வதற்கான திறவுகோலாகும். ஒரு வலுவான வணிகக் குடும்பத்தை முறையான நிர்வாகம் எவ்வாறு தோற்றுவிக்கிறது என்பதை விளக்கும் நான்கு வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • உரிமையாண்மையின் பொறுப்புகளைப் பற்றி இது குடும்பத்திற்கு அறிவூட்டுகிறது
  • இது இளம் குடும்ப அங்கத்தவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்துகிறது
  • தனிப்பட்ட, குடும்ப மற்றும் வணிக சாதனை இலக்குகளைப் பகிர்வதற்கும் கொண்டாடுவதற்கும் இது குடும்பத்திற்கு உதவுகிறது
  • இது குடும்ப வணிகத்தின் பலம் மற்றும் பலவீனங்களைக் கண்டறிய உதவுகிறது

அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாகக் கருதுவோம்.

குடும்ப வணிகத்தின் பங்குதாரர்களுக்கு உரிமையாண்மையின் பொறுப்புகள் தொடர்பில் அறிவூட்டவும்.

ஒரு நிறுவனத்தை சொந்தமாக நடாத்துவது எளிதான காரியம் அல்ல. அதற்கு நிறைய தைரியம், திடசங்கல்பம் மற்றும் கடின உழைப்பு தேவை. வணிகத்தை அதன் தற்போதைய நிலைக்கு கொண்டு வருவதற்கு தனிமையில் போராடிய உரிமையாளர்கள், குடும்ப உறவுகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களின் உறவை எவ்வாறு சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பார்க்க வேண்டும். சரியான முடிவெடுக்கும் செயல்முறையை அறிமுகப்படுத்துவதன் மூலமே அத்தகைய செயல்பாடு எளிதாக்கப்பட்டிருக்கலாம்.

இளம் குடும்ப உறுப்பினர்களை எதிர்காலத்திற்காக தயார்படுத்துங்கள்.

வணிக வாரிசை திட்டமிடல் என்பது நிறுவனத்தின் பொறுப்பைக் கையிலெடுப்பதற்கான வாரிசு மற்றும் ஏற்கனவே பொறுப்பில் இருக்கும் தலைமை நிர்வாக அதிகாரி (அல்லது வேறு சிரேஷ்ட முகாமையாளர் எவரும்) குறித்த காலநேரத்திற்குள் பதவி விலகுவதை உள்ளடக்கியது. குடும்ப வணிகத்தில் சுய-நிர்வாக ஆட்சியை அறிமுகப்படுத்தியதன் மூலம், உரிமையாளர்கள் தீர்மானம் வகுப்பதில் உணர்ச்சிகளை உட்புகுத்துவதை விட பாரிய எதிர்காலத் தோற்றப்பாட்டைப் பற்றி சிந்திக்கத் தொடங்குகிறார்கள்.

தனிப்பட்ட மற்றும் குடும்ப சாதனை இலக்குகளைப் பகிர்ந்து கொண்டாடுங்கள்.

குடும்ப வணிகம் முக்கியமாக குடும்ப உறுப்பினர்களைச் சுற்றியே வளர்ச்சி காணுகிறது. எனவே, அவர்களின் வெற்றி அல்லது தோல்வி வணிகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். வணிகத்தில் பணிபுரியும் அல்லது அதனைச் சொந்தமாக கொண்டிருக்கும் ஒரு குடும்ப உறுப்பினர் கல்வி, தொழில்முறை அல்லது தனிப்பட்ட சாதனை இலக்குகளை அடைந்தால் அல்லது குடும்பம் ஒரு சாதனை இலக்கினை எட்டினால், அவர்களின் வெற்றியைக் கொண்டாட குடும்பத்தினர் அவர்களைச் சூழவிருப்பது முக்கியம்.

குடும்ப வணிகத்தின் பலம் மற்றும் பலவீனங்களைக் கண்டறிய உதவுகிறது.

ஒரு வணிகத்தில் பல்வேறு வளர்ச்சிப் படிநிலைகள் உள்ளன. இந்த படிநிலைகளைக் கடக்கும்போது, வணிகமானது குறிப்பிட்ட வணிகத்திற்குத் தனித்துவமானதாக இருக்கும் பல்வேறு பலவீனங்களையும் பலங்களையும் கண்டறியும். அத்தகைய அடையாளம் காணப்பட்ட பலவீனங்கள் அகற்றப்பட வேண்டும், அதே நேரத்தில் பலங்கள் நிலைநிறுத்தப்பட வேண்டும். சரியான படிநிலைகளில், குறிப்பாக மனித பலங்கள் மற்றும் பலவீனங்களைப் பொறுத்தவரை, சரியான நிர்வாகக் கட்டமைப்புகளை உள்வாங்கிக்கொள்வதன் மூலம் இதைச் செய்யலாம்.

ஒரு முறையான நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டிருப்பது நீண்ட கால அடிப்படையில் வணிகத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதை இப்போது நாம் அறிவோம். ஆனால், அதை எப்படி ஏற்படுத்திக் கொள்வது? பின்வரும் அம்சங்களை உள்ளடக்கிய குடும்ப நிர்வாக ஆட்சி அமைப்பு இதை அடைவதற்கான சிறந்த வழியாகும்:

  • குடும்ப விழுமியங்கள் மற்றும் அதன் நோக்கம்
  • பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் மற்றும் ஆலோசகர்கள்
  • சிரேஷ்ட முகாமைத்துவம்
  • வணிகம் தொடர்பான கொள்கைகள்
  • குடும்ப சபை, குடும்ப மன்றம் போன்ற குடும்ப நிறுவனங்கள்

இந்த கட்டமைப்புகளை ஏற்படுத்தும் போது, நீங்கள் உணர்ச்சிகளின் அடிப்படையில் எல்லாவற்றையும் தள்ளிப்போடுவதை விட மற்றவர்களின் உணர்வுகளை அறிந்து, உறுதியான, உண்மைத்தரவு அடிப்படையிலான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X