ஊழியர் மாற்றத்தைக் குறைப்போம்

சிறந்ததை தக்கவைத்துக்கொள்ளுங்கள்!

0
23

English (ஆங்கிலம்) සිංහල (சிங்களம்) தமிழ் மொழியில் படியுங்கள்

பெரும்பாலான வணிகங்களுக்கு ஊழியர்கள் மாற்றம் என்பது ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினை என்று உங்களுக்குத் தெரியுமா? சில துறைகளில் ஒரு ஊழியருக்கு பதிலாக இன்னொருவரை சரியாக அணுகி, பயிற்சியளித்து பணியமர்த்த ஒரு ஊழியரினுடைய வருடாந்த சம்பளத்தின் ஐந்தில் ஒரு பங்கு தேவைப்படுவதாக பொருளாதார ஆய்வுகள் கூறுகின்றன. இதனாலேயே உங்களுடைய சிறந்த ஊழியர்களை தொடர்ந்து அதே இடத்தில் பேணுதல் மிகவும் முக்கியமான ஒரு விடயமாக உள்ளது. 

காலப்போக்கில் சில ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதற்கு முடிவெடுக்கலாம் அல்லது தேவை ஏற்படும். இருப்பினும், வழக்கத்திற்கு மாறாக ஊழியர் வெளியேற்றம் அதிகம் எனில் ஊழியர்கள் நிறுவனத்தில் இருக்கும் காலத்தில் நீங்கள் அவர்களுக்காக செய்த முதலீடு வீணானதாக கருத்தப்படும் அபாயம் உள்ளது. அதிக ஊழியர் மாற்றம் உங்கள் நிறுவனத்தில் கடைசி விடயமாக இருக்கும். அவை உங்களுடைய செலவுகளை அதிகரிப்பதால் நிறுவனத்தின் நற்பெயரை பாதிக்கும். எனினும், அதிக ஊழியர் மாற்றத்திற்கான தீர்வு ஊழியர்களுக்காக முதலிடுவதை நிறுத்துவது அல்ல. ஊழியர்கள் அதிகளவில் விலகுவதற்கான காரணங்களை கண்டறிந்து தீர்ப்பதே இதற்கான தீர்வாகும்.

நாம் நினைக்கும் அளவில் இது ஒரு கடினமான செயல் அல்ல. எமது அன்றாட வாழ்க்கையில் இதனை அணுகுவோம்,

உங்கள் நிறுவன சாரதியின் தொழில் விபரத்தை கருதுவோம். அவர் உங்கள் நிறுவனத்தின் பெரும்பாலான ஊழியர்களின் வசிப்பிடம் தொடர்பான தகவல்களை அறிந்திருப்பார். அத்துடன் ஒன்றாக பயணிக்கும் போது ஊழியர்கள் சாரதியுடன் தொடர்பாடலில் ஈடுபடுவார்கள். அவர் உங்கள் நிறுவனத்திற்கு மிகவும் பெறுமதி வாய்ந்த ஒருவராக இருக்கிறார். எனினும் அவருடைய எண்ணங்களை நீங்கள் எந்தளவிற்கு கையாளுகிறீர்கள்? அவருடைய கருத்துக்களுக்கு நிறுவனத்தினுள்ளே மதிப்பு உள்ளதா?

இது மிகவும் முக்கியமான சூழ்நிலையாகும். ஒரு சிறிய தொழிலும் முக்கியமானது என்பதுடன் உங்கள் இலக்கை அடைய உதவக்கூடியது. அவரை மகிழ்ச்சியாக வைக்கக்கூடிய ஒரு சிறிய முனைப்பும் சிறந்த வருவாயுடன் கூடிய இன்னுமொரு தொழில் வாய்ப்பு கிடைத்தால் அதனை பெற்றுக்கொள்வது தொடர்பில் அவரை சிந்திக்க வைக்கும்.

எனவே, உங்கள் பணியை எளிதாக்க பின்வரும் விடயங்கள் உதவியாக இருக்கும்,

  • உங்கள் நிறுவனம் மற்றும் பணி புரியும் சூழலுக்கேற்ற சிறந்த மற்றும் பொருத்தமான ஊழியர்களை பணியமர்த்துங்கள். 

நல்ல மனிதவள முடிவுகள் சரியான திறமைகளை ஈர்க்கும் மற்றும் தேர்ந்தெடுக்கும் கட்டத்தில் தொடங்குகின்றன. இது மட்டுமே நிறுவனத்தில் சிறந்த விளைவுகளுக்கு வழிவகுக்கும். இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும், ஏனெனில் பின்னணி மற்றும் அணுகுமுறை தொடர்பான சோதனைகளை மேற்கொள்ளாது ஊழியர்களை பணியமர்த்துவதை விட இவ்வாறானோரை பணியமர்த்தல் அவர்கள் நிறுவன சூழ்நிலைக்கு ஏற்றவாறு இணங்கி பணியாற்றலை உறுதிப்படுத்துவதுடன் நீண்ட கால நிலைப்பையும் ஏற்படுத்தும். 

  • பொருத்தமான சம்பளம் மற்றும் ஊக்கத்தொகையை வழங்குங்கள்

சிறந்த அனுகூலமளித்தல் குறைந்த ஊழியர் மாற்றத்திற்கு சமம் என கருதப்படுகிறது ஏனெனில், சிறந்த வாய்ப்புக்கள், ஈடுபாடு, சவாலான வேலை மற்றும் பணியிட சூழ்நிலையுடன், சௌகரியமான வாழ்க்கை வாழ்வதையும் அதற்கேற்ப ஊதியம் பெறுவதையும் பற்றி ஊழியர்கள் சிந்திக்கிறார்கள். இவை நிறுவனத்தின் சார்பில் வழங்கும் காப்புறுதி மற்றும் ஏனைய சலுகைகளையும் உள்ளடக்கும். இங்கே மனித இயல்பை நோக்கவேண்டும். ஏனென்றால், சில ஊழியர்கள் ஊதியம் சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தாலும், அவர்கள் தற்போது இருக்கும் பணியிடத்தில் மகிழ்ச்சியாக இருக்கும்போது கூட முற்றிலும் புதிய சூழலுக்கு செல்ல விரும்புவர்.

  • உங்கள் ஊழியர்கள் மீது நம்பிக்கைவையுங்கள், அவர்களுக்கான கடமை மற்றும் குறிக்கோளை உணர்த்துங்கள்

பல திறமை வாய்ந்த நபர்களுள் சிறந்த ஒருவரையே நீங்கள் பணியமர்த்துகிறீர்கள். எனவே அவர்கள் உங்கள் நம்பிக்கையை பெற்றுக்கொள்வதுடன் அவர்களுக்கான நோக்கம் மற்றும் இலக்கு வழங்கப்பட்டு அதன்பால் செயற்பட இடமளித்தலும் வேண்டும். இது மறைமுகமாக அவர்களின் ஆற்றல் மற்றும் இயலுமைகளை விருத்தி செய்ய வழிவகுக்கும். அதோடு, வேலையை திறம்பட செய்வதற்கு போதுமான சுய அதிகாரம் வழங்கப்பட்டு மற்றும் தங்கள் மீது நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள் என்பதை மதிப்பார்கள். இன்னொரு நிறுவனத்தின் தொழில் வாய்ப்பு கிடைக்கும் போது அதனை ஏற்றுக்கொள்வதா அல்லது உங்களுடைய நிறுவனத்திலேயே தொடர்வதா என்ற முடிவை பாதிக்கும் இன்னொரு அம்சமாக சுய அபிவிருத்தி இருக்கும்.

  • ஊழியர்களுக்கான மரியாதையை வெளிப்படுத்துங்கள்

அவர்கள் சிந்திக்கவும் புத்தாக்கத்துடன் இருக்கவும் அவர்களின் சிந்தனைகளை பயன்படுத்தவும் இடமளிப்பதுடன் அவர்களை ஏளனம் செய்யவோ அவமானப்படுத்தவோ கூடாது. உங்களுக்கு அவர்கள் பெறுமதி வாய்ந்தவர்கள் என தெரியப்படுத்துங்கள். இதன் மூலம் அவர்கள் நிறுவனத்தின் ஒரு முக்கியமான பாகம் என்பதுடன் உபயோகப்படுத்தி அப்புறப்படுத்தும் ஒரு சொத்து அல்ல என்பதனை உணரவைக்கின்றீர்கள். உடல்நலம் மற்றும் நல்வாழ்வை எதிர்மறையாக பாதிக்காத இடைவெளிகள், ஓய்வு, சரியான சுகாதார வசதிகள் மற்றும் சரியான வேலை நிலைமைகள் ஆகியன தேவைப்படும் மனிதர்கள் என்பதையும் மறந்துவிடாதீர்கள். அது எப்படி என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

  • ஊழியர்கள் பணி மற்றும் வாழ்க்கை சமநிலையை பேண உதவுங்கள் 

சிறந்த தொழிலாளர் தொகுப்பினை உருவாக்குவதற்கு வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையை பராமரிப்பது மிக முக்கியமாகும். சில ஊழியர்களுக்கு ஊக்கமளிக்கும் காரணியாக ஊதியம் காணப்பட்டாலும் சிலருடைய (வாழ்க்கையின் ஒரு கட்டத்தில், கிட்டத்தட்ட அனைவருக்கும்) தொழிலின் முக்கிய அம்சமாக பணி வாழ்க்கை மற்றும் சொந்த வாழ்க்கை சமநிலையை பேணுதல் மிக முக்கிய அம்சமாக காணப்படும். நீங்கள் வணிகத்தின் ஆரம்ப நிலையில் இருக்கும் போது இதன் முக்கியத்துவத்தை அறியாது இருக்கலாம் ஏனெனில், இலாபம் ஈட்டுதல் உங்கள் முக்கிய நோக்காக இருக்கும். எனினும், பணி மற்றும் வாழ்க்கை சமநிலையை பேணுதலை நீங்கள் எந்தளவு விரைவாக முக்கியமானது என உணர்கிறீர்களோ உங்களுடைய சிறந்த ஊழியர்களை தக்கவைத்துகொள்வதற்கான வாய்ப்பும் அதிகம். 

இந்த விடயங்கள் ஊழியர்களை தக்க வைத்துக்கொள்ளல் மட்டுமல்லாது திருப்திகரத்துடன் கூடிய உற்பத்தியாற்றல் மற்றும் ஆக்கத்திறனையும் விருத்தி செய்கின்றது. இவை உங்கள் வணிகத்தின் வளர்ச்சிக்கான முக்கிய காரணிகள் ஆகும்!

English (ஆங்கிலம்) සිංහල (சிங்களம்) தமிழ் மொழியில் படியுங்கள்