பணியாளர் பணியிடலின் முக்கியத்துவத்தை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்

முதல் அபிப்பிராயம் முக்கியமானது!

0
41

English (ஆங்கிலம்) தமிழ் மொழியில் படியுங்கள்

 

Los Angeles இல் உள்ள Interchange குழுமத்தின் ஆலோசனை நிறுவன முதல்வர் Amy Hirsh Robinson “பணியிடல் (Onboarding) எனப்படுவது புதிய பணியாளர்கள் நிச்சயமாக ஈடுபட அல்லது பணியிலிருந்து விலக முடிவு செய்கின்ற ஒரு அற்புத தருணம்” எனக் குறிப்பிடுகிறார்.புதிய ஊழியர்களிடையே அவர்கள் வேலைபுரியும் காலம் வரை நல்லெண்ணத்தை உருவாக்குவது உறுதித்தன்மையினை அதிகரிக்கும்“.

உங்கள் நிறுவனம் எவ்வாறு காணப்படுகிறது, அது எவ்வாறு விளம்பரம் செய்கிறது, அதே போல் நீங்கள் விண்ணப்பத்தாரர்களை எவ்வளவு கவனமாக மதிப்பீடு செய்கிறீர்கள், இவை அனைத்தும் சரியான பணியாளரைக் கண்டுபிடிப்பதில் வெற்றிபெறுவதற்கு எவ்வளவு முக்கியமானது என்பதை போதுமான அளவில் வலியுறுத்த முடியாது மற்றும் இவை பற்றி வேறு எங்கும் எழுதப்பட்டுள்ளன. அந்த சிறந்த நடைமுறைகளை நீங்கள் பின்பற்றியுள்ளீர்கள் என்று கருதி, இந்த கட்டுரையில் சம அளவில் முக்கியமான பணியாளர் பணியிடல் பற்றி பேசுவோம்.

Talya Bauer, Ph.D., Onboarding New Employees இன் நூலாசிரியர்: வெற்றியை அதிகப்படுத்துவதில் குறைந்தது முதல் அதிக பயனை பெற்றுத்தரக்கூடிய நான்கு வேறுபட்ட அளவிலான பணியிடலை அடையாளம் காணப்பட்டுள்ளது.

  • இணங்குதல்
  • விளக்கம்
  • கலாச்சாரம் 
  • இணைப்பு

 இதை நாம் மேலும் கவனித்தால்,

இணங்குதல் விளக்கம்  கலாச்சாரம்  இணைப்பு 
சட்டம் மற்றும் கொள்கை தொடர்பான சிக்கல்களை பற்றி ஊழியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பை மனிதவள மேம்பாட்டுத்துறை ஏற்கவேண்டும்  புதிய வேலை பங்கு ஊழியருக்கு முறையாகத் தெரிவிக்கப்பட வேண்டும் நிறுவனத்தின் மதிப்புகள் மற்றும் விதிமுறைகளுக்கு அவர்களை வெளிப்படுத்துவது அவசியம் வலையமைப்பை ஊக்குவித்தல்
ஆரம்பத்தில் இருந்தே இதைத் தொடங்குவது நல்லது, இது அவருக்கு மனரீதியாக ஏற்றுக்கொள்வதற்கான நேரத்தைக் கொடுக்கும் பயிற்சியை விட வழிகாட்டுதலில் கவனம் செலுத்துங்கள் (ஆனால் பயிற்சி தேவையில்லை என்று அர்த்தமல்ல) அவர்களுக்கு நிறுவனத்தின் தொலைநோக்கு மற்றும் நோக்கம் தெரிவிக்கப்பட வேண்டும் வேலை சூழலில் அவர்களை உள்ளடக்கியதாகவும் வசதியாகவும் உணரச் செய்யுங்கள் 

30-90 நாட்கள் காலத்தை மதிப்பிடுங்கள் 

  அவர்களுக்கு ஒரு பணியாளர் கையேட்டைக் கொடுங்கள் தகவல் வலையமைப்புகளுடன் அவர்களை இணைப்பது அவசியம்

மேலே குறிப்பிட்டுள்ள உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவது சந்தேகமின்றி சரியான பாதைக்கு உங்களை அழைத்துச் செல்லும்ஆனால், உங்கள் பணியாளர் பணியிடல் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை மதிப்பீடு செய்வதும் மிக முக்கியம். பரந்த கண்ணோட்டத்திலிருந்து நிறுவனம் மற்றும் குழு பற்றி சில கேள்விகளைக் கேட்பதன் மூலமும் உங்களை நீங்களே கேள்விகளைக் கேட்பதன் மூலமும் இதனைச் செய்யலாம்.

கீழே உள்ளவை பணியாளரின் பணியிடல் தொடர்பாக நீங்கள் கேட்கக்கூடிய சில முக்கியமான கேள்விகள்: 

  • புதிய ஊழியர்கள் பணியாற்றுவதற்கும் அணியுடன் ஒத்துழைப்பதற்கும் எவ்வளவு தூரம் ஊக்குவிக்கப்படுகிறார்கள்?
  • அவர்கள் வேலையில் வரவேற்பைப் பெறுகிறார்கள் என்று நினைக்கிறீர்களா மற்றும்  தற்போது இருக்கும் ஊழியர்களிடமிருந்து அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கிறதா
  • இறுதி இலக்கை அடைவதற்கு அவர்கள் எவ்வளவு கவனம் செலுத்துகிறார்கள்?
  • உங்கள் புதிய ஊழியர்கள் தமக்கான பொறுப்புகளை விருப்புடன் மேற்கொள்ள இணக்கமான நட்புமிக்க பணிபுரியும் சூழலாக கருதுகிறார்களா?
  • அவர்கள் செயல்முறையில் ஆக்கபூர்வமான கருத்துக்களை அளிக்கிறார்களா?

இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவது, நீங்கள் கவனமாக தேர்ந்தெடுத்த ஊழியர்களை மகிழ்ச்சியாகவும் ஈடுபாட்டுடனும் மற்றும் உங்கள் நிறுவனத்துடன் நீண்ட காலத்திற்கு வைத்திருக்க நிச்சயமாக உதவும். காலப்போக்கில் உங்கள் மனிதவள செலவினங்களைக் குறைப்பதோடு உற்பத்தித்திறனை மேம்படுத்தும் மற்றும் நிறுவனத்திற்கு வேறு பல நன்மைகளைக் கொண்டுவரும்.

English (ஆங்கிலம்) தமிழ் மொழியில் படியுங்கள்