spot_imgspot_img

வணிகமொன்றை கொள்முதல் செய்ய திட்டமிடுகிறீர்களா?

வேறொருவரின் கீழ் வேலை செய்து சலித்து விட்டதா? ஆம், உங்கள் தயாரிப்பை/சேவையை விற்கக்கூடிய சாத்தியக்கூறுகள் மற்றும் அதற்கான வாடிக்கையாளர் பிரிவை இனங்கண்டால், நீங்கள் எப்போதும் உங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்கலாம். இருப்பினும், இந்த தீர்மானத்தை எடுப்பதற்கு முன், உங்கள் நோக்கங்களை ஏற்படுத்தி, எதிர்காலத்தில் உங்களையும் வணிகத்தையும் நீங்கள் என்னவாக மாற்ற எதிர்பார்க்கிறீர்கள் என்பதைப் பற்றி சிந்தியுங்கள். இந்த கட்டத்தில் நீங்கள் ஒரு வணிகத்தை முழு நேர தொழிலாக அல்லது பகுதி நேர முதலீடாக வாங்க விரும்புகிறீர்களா அல்லது புதிதாக உங்கள் சொந்த தொழிலை அத்திவாரத்திலிருந்து தொடங்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டியது அவசியம். நீங்கள் வணிகத்தில் முதலிடுவது உங்கள் முயற்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தொழில்முயற்சியாண்மையின் நுணுக்கங்களை நீங்கள் நன்கு அறிந்திருப்பதுடன், அதற்கேற்றவாறு நீங்கள் எடுக்க வேண்டிய பல தீர்மானங்கள் உள்ளன. சிலருக்கு, ஒரு வணிகத்தைத் தொடங்குவதற்கு தொழில்முயற்சியாண்மை சவாலின் முழு முயற்சியையும் பொறுப்பெடுப்பது கொஞ்சம் கடினமாகவோ அல்லது மிகவும் நேரத்தை எடுத்துக்கொள்ளும் ஒன்றாகவோ இருக்கக்கூடும். இன்னும் சிலருக்கு, அவர்கள் பகுதி நேர தொழில்முயற்சியாளராக மாற விரும்புவதால், தன்னாட்சி செயல்பாட்டைக் கொண்டிருப்பதே விருப்பத்திற்குரிய தெரிவாக அமையலாம். இந்த இரண்டு பிரிவுகளையும் சேர்ந்தவர்களுக்கு, ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்ட வணிகத்தைக் கொள்முதல் செய்வது ஒரு சிறந்த தீர்வாகும்.

இருப்பினும், நீங்கள் ஒரு வணிகத்தை அதன் நிதி நிலைமை மற்றும் தற்போதுள்ள சந்தை வாய்ப்புகளை ஆழமாக பகுப்பாய்வு செய்யாமல் வாங்கக்கூடாது (நீங்கள் சொந்தமாக வணிகமொன்றைத் தொடங்கினாலும், சந்தை ஆராய்ச்சி செய்து நீண்ட காலத்திற்கு வணிகம் சாத்தியமா என்பதை தீர்மானிக்க வேண்டியது அவசியம்). இவற்றைக் கண்டறிய, வணிகம் தொடர்பான மதிப்பீடு கட்டாயமாகும். ஆம், ஒரு வணிகத்தை கொள்முதல் செய்வது அல்லது வேறு வணிகமொன்றைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான தீர்மானங்களை எடுக்க நீங்கள் உங்களை நம்புவது சரியே. இருப்பினும், இந்த விடயத்தில் நிபுணர்களின் ஆலோசனை எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது.

நீங்கள் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு முன்னர் உங்கள் பாதையை ஆராய்ந்து அறிவுறுத்துவதற்கு பல்வேறு தரப்பினர் உள்ளனர். சட்டத்தரணிகள்,கணக்காளர்கள்,வங்கியாளர்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் அவர்களுள் சிலர். உதாரணமாக ஒரு சட்டத்தரணியை அணுகுவீர்கள் எனின் குத்தகை பற்றி மதிப்பாய்வு செய்ய அவர்கள் உங்களுக்கு உதவுவர். தனிப்பட்ட செல்வங்களை திட்டமிடுபவர்கள் (Personal Wealth Planners)நீங்கள் வணிகத்தின் பங்குகளையா அல்லது சொத்துக்களையா கொள்வனவு செய்ய வேண்டும் என்பது பற்றி அறிவுறுத்துவர். நீங்கள் இதற்காக வங்கிக்கடனொன்றை பெற எண்ணுகிறீர்கள் எனின் வங்கியாளர்கள் அது பற்றிய சிறந்த அறிவினை வழங்குவர். எப்போதும் இவர்களிடமிருந்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு  தயங்காதீர்கள்.

ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு முன் சரியான திசையில் செல்ல உங்களுக்கு உதவும் சில தரப்பினர் உள்ளனர். சட்டத்தரணிகள், கணக்காளர்கள், வங்கியாளர்கள் மற்றும் பிற வணிக உரிமையாளர்கள் அவர்களுக்கான சில உதாரணங்கள். உதாரணமாக, நீங்கள் ஒரு சட்டத்தரணியுடன் கலந்தாலோசித்தால், குத்தகைகள், ஒப்பந்தங்கள் மற்றும் பிற சட்டப்பூர்வ ஒப்பந்தங்கள் மற்றும் பொறுப்புகளை மதிப்பாய்வு செய்ய அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். நீங்கள் வணிகத்தின் பங்குகள் அல்லது சொத்துக்களை கொள்முதல் செய்ய வேண்டுமா என்பது குறித்து தனிப்பட்ட நிதி வளத்  திட்டமிடலாளர்கள் போன்றவர்கள் உங்களுக்கு ஆலோசனை கூறலாம். இந்த நோக்கத்திற்காக நீங்கள் வங்கிக் கடனைப் பெறத் திட்டமிட்டால், வங்கிப் பணியாளர்கள் தங்கள் அறிவின் மூலம் இதில் உங்களுக்கு உதவலாம். எனவே, சில ஆலோசனைகளை வழங்க முடியுமா என்று அவர்களை கேட்க தயங்க வேண்டாம்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிலைமை கைமீறினால், பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு நிறுவனத்தால் போதுமான நிதியைத் திரட்ட முடியும் என்று உறுதியான வழிமுறைகள் இருந்தாலொழிய, கடன் வாங்கிய பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கான போதுமான வழிமுறைகள் இன்றி அதனை பங்கு நிதியின் ஆதாரமாக பயன்படுத்துவது ஒருபோதும் நல்லதல்ல. முடிந்தால், பணம் அல்லது திரவ சொத்துக்கள் தெரிவை மேற்கொள்ளவும். இது வணிகத்தின் நிதியியல் ஸ்திரத்தன்மை தொடர்பான தீர்மானங்களுக்கு உங்களை வழிநடாத்திச் செல்கிறது. ஒரு புதிய வணிகம்/வணிக தொடக்கம் என்று வரும்போது, மூலதனத்தின் வடிவத்தில் எப்போதும் ஒருவித நிதியுதவி தொடர்புபட்டிருக்கும். நீங்கள் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் வணிகமொன்றைக் கொள்முதல் செய்யும் போது, ஆரம்ப முன்பணத்தைத் தவிர “தொழிற்பாட்டு மூலதனம்” என அழைக்கப்படும் அம்சமும் உங்களுக்குத் தேவைப்படும்.

நீங்கள் ஒரு வணிகத்தைக் கொள்முதல் செய்ய முன் விற்பனையாளரின் நிதியியல் அறிக்கைகள் மற்றும் பிற பொருந்தக்கூடிய பதிவு ஆவணங்களை கவனமாக ஆராய்வது முக்கியம். இத்தகைய ஆவணங்கள் வருமாறு:

  • ஐந்தொகை
  • இலாப, நட்ட கணக்குக் கூற்றுகள்
  • பயன்பாட்டுக் கட்டணப் பட்டியல்கள்  
  • வணிக பதிவு ஆவணங்கள்
  • வணிகத்தின் தன்மைக்கு பொருந்தும் அனுமதிப் பத்திரங்கள்
  • பெறப்பட்டுள்ள கடன் வசதிகள் 

நீங்கள் அனைத்து துறைகளிலும் ஒரு நிபுணராக இல்லாததால், மேலே உள்ள ஆவணங்களை பகுப்பாய்வு செய்வதில் தொழிற்தகைமை கொண்டவர்களின் உதவியைப் பெறுவது சிறந்தது. மேலே உள்ள அனைத்து ஆவணங்களும் பகுப்பாய்வு செய்யப்பட்டவுடன், நீங்கள் எதிர்பார்க்கும் தேறிய வருமானத்தை உங்களால் அனுமானிக்க முடியும். வணிக செயல்பாட்டை விரிவுபடுத்துவதற்கும், செலவுகளைக் குறைப்பதற்கும், இலாபத்தை அதிகரிப்பதற்கும் உள்ள சாத்தியத்தைக் கருத்தில் கொள்ளுங்கள். இது உங்களுக்கு நீங்கள் கொள்முதல் செய்யவுள்ள வணிகமொன்றின் விலைப் பெறுமதியைத் தீர்மானிக்க உங்களுக்கு இடமளிக்கும். மேலே குறிப்பிட்டுள்ள தகவல் மற்றும் புள்ளிவிவரங்களில் நீங்கள் மிகவும் பரிச்சயம் உள்ளவராயின் நீங்கள் மேற்கொண்டு செல்ல முடியும்!

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X