spot_imgspot_img

நடைமுறைச்சாத்தியமான இலக்குகளை நிர்ணயித்தல்

உங்கள் கனவுகளை எவ்வாறு நனவாக்குவீர்கள்? நீங்கள் ஒவ்வொரு காலையிலும் நித்திரை விட்டு எழும் போது அன்றைய உங்கள் இலக்குகளைப் பற்றி சிந்தித்து அவற்றை ஒரு தாளில் குறித்துக் கொள்கிறீர்களா? உங்கள் இறுதி இலக்கை நோக்கி அந்த தினசரி இலக்குகள் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன? இந்த வகையில் அன்றாட அடிப்படையில் அவற்றை முன்னெடுப்பதால், அது எந்த அளவுக்கு திறன் கொண்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது?

எல்லாவற்றுக்கும் முதலில், இலக்குக்கும் கனவுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். எதையாவது சாதிக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் கனவு காண்பது உங்கள் இறுதி இலக்கை நோக்கி உங்களை வழிநடத்தப் போவதில்லை. குறுகிய கால அடிப்படையில் இடைநிலை இலக்குகளை நிர்ணயிப்பதற்கு முன் உங்கள் நீண்ட கால இலக்கு தொடர்பில் நீங்கள் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும்.

உங்களுக்கான நீண்ட கால இலக்கை நீங்கள் திட்டமிட்டு, தெளிவாக வரையறுத்தவுடன், அந்த இலக்கை அடைய நீங்கள் எடுக்க வேண்டிய ஒவ்வொரு சிறிய அடிகளையும் குறித்துக் கொள்ளத் தொடங்க வேண்டும். இலக்கை நிர்வகிக்கக்கூடிய பாகங்களாக வெவ்வேறாக்கிக் கொள்வதன் மூலம் அவற்றை இன்றே செய்யத் தொடங்குங்கள். இதனால் அந்த இலக்கு பாரிய, சவால்மிக்க ஒன்று என்ற உணர்வைப் போக்குகிறது. ஒரு நேரத்தில் ஒரு துணை இலக்கினை வெற்றிகரமாகக் கையாளவும்,  சமாளிக்கவும் உங்களுக்கு தைரியம் இருந்தால் பெரும்பாலான இலக்குகளை உங்களால் அடையப்பெற முடியும்.

உங்கள் இலக்குகள், பெரிய அல்லது சிறிய, நீண்ட கால அல்லது குறித்த நாளுக்கான என எவையாக இருந்தாலும், “SMART” கட்டமைப்பைப் பின்பற்ற வேண்டும்.

“SMART” இலக்கு என்பதை நீங்கள் அறியாவிட்டால், அது பின்வரும் ஒவ்வொரு அளவுகோலையும் பூர்த்தி செய்யும் ஒன்றாகும்:

Specific (குறிப்பிட்டது)
Measurable (அளவிடக்கூடியது)
Achievable (அடையக்கூடியது)
Realistic (நடைமுறைச்சாத்தியமானது) 
Time-bound (கால வரையறை கொண்டது)

உங்கள் இலக்கு, குறிப்பிடப்படும் போது, மேற்குறிப்பிட்ட அனைத்து அம்சங்களையும் பூர்த்தி செய்தால், அது அடையப்படக்கூடிய தெளிவான மற்றும் எளிதான இலக்காக இருப்பதுடன், வேறு எவருக்கும் அதனை குறிப்பிடக்கூடியதாகவும் அமையும்.

உங்கள் இறுதி இலக்கை நோக்கி உங்களை கொண்டு செல்லும் ஒரு திட்டத்தை ஏற்படுத்த உங்களுக்கு உதவும் மேலும் சில உதவிக் குறிப்புகள் கீழே உள்ளன.

  • நீங்கள் உண்மையிலேயே அடைய விரும்புவதைப் பற்றியும், அதிலும் முற்றிலும் விருப்பத்திற்குரியது அல்லது “இருந்தால் நல்லது” எவை என்பதைப் பற்றியும் நன்றாகச் சிந்தியுங்கள்.
  • முடிந்தவரை விரைவாக இலக்கை நிர்ணயிக்கத் தொடங்குங்கள்
  • உங்கள் கனவை குறிப்பிட்ட இலக்குகளாக மாற்றிக்கொள்ளுங்கள்.
  • உங்கள் கனவை அடையப்பெறுவதில் உங்கள் அணியும் அதற்கு உறுதுணையாக இருந்தால் மட்டுமே அது நனவாகும். எனவே, இலக்குகளை நிர்ணயிக்கும் முன், கனவை உங்கள் அணியுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
  • யதார்த்தமாக இருங்கள் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள SMART கட்டமைப்பைப் பின்பற்றுங்கள்.
  • மூலோபாயரீதியாக சிந்தியுங்கள்
  • உங்கள் மூலோபாயம் நீண்ட கால மற்றும் குறுகிய கால அக்கறைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
  • நீங்கள் அதனை அடையப்பெற உதவுவதற்கு ஒரு நடைமுறைச்சாத்தியமான வரவுசெலவுத் திட்டத்தை அமைத்துக் கொள்ள மறக்காதீர்கள்.
  • நீங்கள் உங்கள் அடிப்படை விடயங்களை சரியாகச் செய்ய வேண்டும் மற்றும் பணியின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்ய வேண்டும்.

எல்லாவற்றையும் விட மிக முக்கியமான உதவிக்குறிப்பு, எல்லாவற்றையும் எழுதிக் குறித்துக் கொள்ளுங்கள்! நீங்கள் விடயங்களை எழுதிக் குறித்துக்கொள்ளும்போது, அது உங்கள் மூளையில் நீண்ட நேரம் ஒட்டிக்கொண்டிருக்கும் மற்றும் கூடுதல் பலனைக் கொண்டுள்ளது; உங்கள் இலக்குகளை இன்றே எழுதிக் குறித்துக்கொள்ள முயற்சிக்கவும், அவற்றை சிறப்பாக வரையறுத்து அவற்றை நோக்கிச் செயல்பட இது உதவும்.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X