English (ஆங்கிலம்) සිංහල (சிங்களம்) தமிழ் மொழியில் படியுங்கள்

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வணிகங்களுக்கு சமூக ஊடக இருப்பை உருவாக்குவது அவசியமாகும். மேலும், இது ஒரு போட்டியான நிலப்பரப்பாகும். உங்கள் தயாரிப்பை விளம்பரப்படுத்த வேண்டுமா? Brand தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்க வேண்டுமா? வணிக உலகில் உங்களுக்கான ஒரு  அடையாளத்தை பதிக்க வேண்டுமா? சமூக ஊடகங்களைப் பயன்படுத்துங்கள். தொடக்க வணிகங்களுக்கு கூட ஆட்சேர்ப்பு, நிதி திரட்டலுக்கான சுயவிவரத்தை உருவாக்குதல், பயனர் தளத்தை உருவாக்குதல் மற்றும் இன்னும் பல அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு சமூக ஊடகங்கள் தேவைபடுகின்றன. ஆனால், சமூக ஊடகங்களை கையாள்வது என்பது எளிதான காரியமல்ல. கடினமாக சம்பாதித்த அந்தஸ்தை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் அதிக முயற்சி தேவைப்படும்.

சமூக ஊடகங்களின் நிலையை மிகச்சரியான முறையில் நிறுவுவதற்கான வழிமுறைகளென்று எதுவும் வரையறுக்கப்படவில்லை. எனினும், பரிசோதிக்கப்பட்ட மற்றும் முயற்சித்த சில வழிமுறைகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

1) எப்போதும் செயலில் இருக்க வேண்டும் (Be Active):  

உங்களுக்கு யாரேனும் உடனடியாக பதிலளிப்பதை விரும்புவீர்களல்லவா? ஆமாம், அவ்வாறு செய்வதனால் உங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்ற  உணர்வைப்பெறுகிறீர்கள். உங்களைப்போலவே மற்றெல்லோரிடமும் இவ்வுணர்வு காணப்படும். ஆகவே, comments மற்றும் messages ற்கு உடனடியாக  பதிலளியுங்கள்.

2) தொடர்புபடுத்தக்கூடியதாக இருங்கள் (Be relatable) 

தங்களைப்போன்று பேசுபவர்கள், சிந்திப்பவர்கள் மற்றும் யார் அவர்கள் அனுபவிப்பவற்றிற்கு தொடர்புபடுத்துகிறார்களோ, அவர்களையே மக்கள் விரும்புவார்கள் மற்றும் பின்தொடர்வார்கள். தற்போது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இல் என்ன நடக்கிறது என்பதில் கவனம் செலுத்துங்கள். மிகைப்படுத்தலின் மூலம்  பார்வையாளர்களுடனான தொடர்பாடலை மேற்கொள்வதில் கவனம் செலுத்துங்கள். Memeகளை முயற்சி செய்து பாருங்கள். 

3) மிக முக்கியமானதாக, உண்மையாக இருங்கள் (Be authentic)

நாங்கள் அனைவரும் போலியான விளம்பரங்களை பார்த்துள்ளோம் அல்லவா?  உதாரணமாக,  நீங்கள்  ஒரு மில்லியன் டொலர்களை வென்றுள்ளீர்கள் (எதுவும் செய்யாமலே)!!  நீங்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்!! அல்லது நாட்டில் சிறந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்!! போன்ற நுட்பமான விளம்பரங்கள். நீங்களும் இதைப்போன்று  விளம்பரம் செய்ய எண்ணினால், தயவு செய்து அவ்வாறு செய்யாதீர்கள்! வெறுமனே விற்பனை செய்வதற்கு முயற்சிக்காமல், உங்களுடைய பிராண்ட் இனை கட்டியெழுப்புங்கள். மக்கள் பார்த்துவிட்டு லைக் அல்லது பின்தொடர்வார்கள் மற்றும் அவர்களுக்கு நீங்கள் கூறுவது உண்மையானது நேர்மையானது என உணர்ந்தால் அங்கேயே மாறாது இருப்பார்கள். நீங்கள் குறிப்பிட்ட பின்தொடர்பவர்களை உருவாக்கினீர்கள் எனின் அந்த மக்கள் உங்களுடைய தயாரிப்புகள் மற்றும் கதைகளை ஏற்றுக்கொள்வார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் உங்களுடனும் உங்கள் பிராண்டுடனும் இருவழி உரையாடலின் ஒரு பகுதியாக இருப்பார்கள். சிறந்த வழி என்னவென்றால், வெறுமனே உரையாடாமல் மிக முக்கியமான பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் சாத்தியமான வாடிக்கையார்கள் ஆகியவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் மற்றும் உத்வேகமடையுங்கள்.

 

ஒட்டுமொத்தமாக, சமூக  ஊடகங்கள் என்பது ஒரு சிக்கலான வலையமைப்பாகும். இங்கு பலபேர் செயல்படுவார்கள் ஆனால் மிகச்சிறந்தவர்களே இங்கு வெற்றியடைவார்கள். எனினும், மேற்கூறிய மூன்று வழிமுறைகளை கடைப்பிடியுங்கள். அதேவேளை, நீங்கள் நேரம் பார்த்து சரியான நகர்வுகளை மேற்கொள்வீர்களாயின் நீங்கள் எளிதாக அவர்களில் ஒரு வெற்றியாளராக முடியும். மேலே குறிப்பிட்ட மூன்று விதிகளுக்கு இணங்கி ஈடுபட என்றும் தயங்க வேண்டாம். 

English (ஆங்கிலம்) සිංහල (சிங்களம்) தமிழ் மொழியில் படியுங்கள்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here