Credits: athree23 (Pixabay)

English (ஆங்கிலம்) සිංහල (சிங்களம்) தமிழ் மொழியில் படியுங்கள்

SWOT பகுப்பாய்வு என்றால் என்ன?

ஒரு வணிகத்தினுடைய பலம் மற்றும் பலவீனங்களை புரிந்துகொள்ளவும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள், நீங்கள் அகற்ற வேண்டிய அச்சுறுத்தல்களை அடையாளம் காணவும் உதவுகின்ற பொதுவான நுட்பமே SWOT பகுப்பாய்வு ஆகும். உங்கள் வணிக வியூகத்தை விருத்தி செய்ய இது மிகவும் எளிமையான மற்றும் சக்திவாய்ந்த வழிமுறையாகும். SWOT என்பது Strengths (பலங்கள்), Weaknesses (பலவீனங்கள்), Opportunities (வாய்ப்புகள்) மற்றும் Threats (அச்சுறுத்தல்கள்) எனப் பொருள்படும்.

பலம் மற்றும் பலவீனங்கள் உங்கள் நிறுவனத்தின் உள்ளக சூழலை சார்ந்தது என்பதுடன் அதனை உங்கள் வணிகத்தின் நன்மைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொள்ளவும் முடியும். இக்காரணிகள் பொதுவாக குழுக்கள், அமைவிடம், அறிவுசார் சொத்துகள், காப்புரிமைகள் மற்றும் பலவற்றை சார்ந்ததாக இருக்கும்.

வாய்ப்புக்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் அந்தந்த நிறுவனம் மற்றும் அதன் தொழில் சம்பந்தமான  வெளிப்புற காரணிகளுடன் தொடர்புடையவையாகும். இது விருப்பத்திற்கேற்ப கட்டுப்படுத்த முடியாத பாரிய சூழலை பிரதிபலிக்கின்றது. எனினும், வணிகமானது வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ளவும் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக தன்னை தற்காத்துக்கொள்ளவும் முடியும்.  உதாரணத்திற்கு போட்டியாளர்கள், மூலப்பொருட்களின் விலைகள், நாட்டினுடைய மற்றும் வாடிக்கையாளருக்கான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள், கப்பல் போக்குவரத்துக்கள் போன்றவற்றை வெளிப்புற காரணிகளாக கருத முடியும்.

SWOT பகுப்பாய்வினை மேற்கொள்ள வேண்டியவர்கள் யார்?

வணிகத்தின் நிர்வாக பாகத்தில் பங்கு கொள்பவர்கள் SWOT பகுப்பாய்வினை மேற்கொள்ள வேண்டும். ஒரு வணிகத்தின் பல்வேறு முன்னோக்குகள் கொண்ட கூட்டத்திலுள்ளோர் பங்கு கொள்ளும் போது இம்முறை இன்னும் பயனுள்ளதாக அமையும். அனைவரும் இதில் கலந்து கொள்ளுதல் மிகவும் முக்கியமானது. இது வணிகம் மற்றும் அதனுடன் தொடர்புடையோரின் மூளைச்சலவை செய்யும் அமர்வாகவோ அல்லது நிர்வாக மட்டத்தில் மிக முக்கியமான அமர்வாகவோ மேற்கொள்ளப்படலாம். இம்முறையில் கூறப்பட்டுள்ள நான்கு பிரிவுகளின்; பலங்கள், பலவீனங்கள், வாய்ப்புக்கள், அச்சுறுத்தல்கள் கீழும் ஒவ்வொருவரினதும் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கான எளிய முறை கையாளப்பட வேண்டும்.

மேற்கூறப்பட்ட ஒவ்வொரு பிரிவுகளிலும் அடங்கியுள்ள விடயங்கள் பற்றி நோக்குவோம்.

பலங்கள் (Strengths)

நிறுவனத்தின் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உள்ளக காரணிகளை இது குறிக்கின்றது. இவை சந்தையில் உயர் இடத்தை அடையவும் உங்கள் சந்தைப்பங்கை நிலையாக பேணவும் மற்றும் விருத்தி செய்யவும் உதவுகின்றன. உங்கள் பலங்களை அடையாளம் காண பின்வரும் வினாக்களை கேளுங்கள்.

  • போட்டியில் முன்னிற்க வெற்றிகரமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் நிறுவனத்தின் செயற்பாடுகள் எவை?
  • ஏனையோரிலிருந்து தனித்து நிற்பதை வலுப்படுத்தும் நிறுவனத்தினுடைய பெறுமதி வாய்ந்த சொத்துக்கள் (மனிதவளம் உட்பட) எவை?
  • உங்களுடைய தனிப்பட்ட விற்பனை முன்மொழிவுகள் (USPs) எவை?
  • மற்றவர்களால் தொடர்புபடுத்த முடியாத உங்கள் நிறுவனம் அல்லது வர்த்தக நாமத்துடன் (Brand) தொடர்பான தனிப்பட்ட பண்பு யாது?
பலவீனங்கள் (Weaknesses)

உங்கள் பலங்களிலிருந்து உங்களை அப்பாற்படுத்தும் காரணிகள் உள்ளனவா? இவையே உங்கள் நிறுவனத்தின் எதிர்மறையான பண்புகள் என்பதுடன் பின்வரும் கேள்விகளின் மூலம் அவற்றை இனங்காண முடியும்.

  • உங்களுடைய நிறுவனத்திற்குள் திறமையாக இல்லாத செயல்முறைகள் யாவை?
  • உங்கள் நிறுவனத்திற்குள் தொழிலாளிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் யாவை?
  • சந்தையில் உங்கள் உற்பத்திகள் தரமானதாக உள்ளனவா?
  • உங்களுடைய போட்டியாளர்களிலிருந்து நீங்கள் பின்தங்கியிருக்க ஏதேனும் காரணிகள் உள்ளனவா?
வாய்ப்புக்கள் (Opportunities)

உங்கள் வெற்றிக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வழிவகுக்கும் காரணிகள் வாய்ப்புக்கள் ஆகும். பெரும்பாலும், இவையே நீங்கள் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய வெளிப்புறச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும்.

  • சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகளில் உங்களுக்கு சாதகமான ஏதேனும் மாற்றங்கள் உள்ளனவா?
  • சந்தையின் புதிய போக்குகள் உங்கள் வணிகத்தை நேர்மறையான குறிப்பில் பாதிக்கிறதா?
  • உங்கள் நிறுவன வளர்ச்சி சந்தை வளர்ச்சிக்கு ஏற்ப உள்ளதா?
அச்சுறுத்தல்கள் (Threats)

உங்கள் வணிகத்தை வீழச்செய்யக்கூடிய அல்லது எதிர்மறையாக பாதிக்கக்கூடிய வெளிப்புறக்காரணிகள் அல்லது தரப்பினர்கள் காணப்படின் அவை அச்சுறுத்தல்கள் ஆகும். நீங்கள் யாதேனும் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கின்றீர்களா என்பதை அறிந்து கொள்ள பின்வரும் வினாக்களை பயன்படுத்துங்கள்.

  • ஒரு போட்டியாளரினுடைய சந்தை நுழைவு உங்களை எவ்வாறு பாதிக்கின்றது?
  • புதிய தொழிநுட்பங்கள் தொடர்பில் உங்கள் போட்டியாளர்கள் புதுப்பித்தவர்களாக இருக்கிறார்களா மற்றும் அதில் நீங்கள் பின்தங்கியுள்ளீர்களா?
  • புதிய சந்தை போக்கு வணிகத்தை ஆபத்தில் ஆழ்த்துமா?
  • நுகர்வோர் நடத்தை போக்குகள் எதிர்மறையாக உள்ளனவா?

ஒரு உணவகத்தில் மேற்கொள்ளப்படும் SWOT பகுப்பாய்வு பின்வருமாறு அமையும்.

SWOT பகுப்பாய்வினை மேற்கொள்வதற்கான நிலையான முறை இல்லை என்பதுடன் SWOT வரைபடம் தொழில்துறையைப் பொறுத்து ஒரு வணிகத்திலிருந்து மற்றொரு வணிகத்திற்கு வேறுபடும். இந்த செயல்முறை மேற்கொள்ளப்பட்டு அனைவரினதும் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்ட பின் புதிய வியாபார கட்டமைப்புக்களை முன்னெடுக்க முடியும். உள்ளக காரணிகளின் மூலமாக வெளிப்புற காரணிகளுடன் போட்டியிடுதல் அடுத்தகட்ட நடவடிக்கையாக அமையும். உதாரணமாக உங்கள் பலங்களை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புக்களை நோக்குங்கள் அல்லது உங்கள் பலத்தின் மூலமாக வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ளும் வழிகளை தேடுங்கள்.

English (ஆங்கிலம்) සිංහල (சிங்களம்) தமிழ் மொழியில் படியுங்கள்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here