English (ஆங்கிலம்) தமிழ் மொழியில் படியுங்கள்

முந்தைய கால தலைவர்கள் எவ்வாறு பொதுமக்களை தங்கள் சுதந்திரத்திற்காக போராட முன்வர வைத்தார்கள் என்பது பற்றி எப்போதாவது சிந்தித்துள்ளீர்களா? ஆபிரஹாம் லிங்கன் சிவில் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவந்த விதத்தினை கண்டு வியந்துள்ளீர்களா? அவர்கள் குறித்த இலக்கை அடைவதற்காக மக்களை இணங்க வைப்பதில் தேர்ச்சி பெற்றவர்கள். ஆகவே,  தொழில் முனைவோர் என்ற ரீதியில் நீங்கள் ஏன் இந்த திறமையை கொண்டிருக்க வேண்டும்? அதைப் பற்றி இனி பார்ப்போம்.

குறித்த விடயம் மீது ஒருவருக்கு இருக்கக்கூடிய கண்ணோட்டத்தை/எண்ணத்தை மாற்ற வைப்பதற்கு அவருடன் திறம்பட தொடர்பாடும் ஆற்றல் ஒரு தொழில் முனைவரிடம் காணப்பட வேண்டிய முக்கிய திறமைகளில் ஒன்றாகும். ஏனென்றால், தொழில் முனைவோர்  மாற்றத்தின் முகவராகவும் செயல்படுகின்றனர். நீங்கள் புதிய உற்பத்தியொன்றை சந்தைக்கு அறிமுகப்படுத்துகிறீர்கள், அதாவது மக்கள் முன்னர் அனுபவித்திராத ஒன்றை அறிமுகம் செய்கிறீர்கள் எனின், மக்கள் அதனை கண்மூடித்தனமாக நம்பி உங்களுடைய பொருளை கொள்வனவு செய்யமாட்டார்கள். இந்நிலையில், மிகக்கவனமாக  நுகர்வோரை உங்களுடைய பொருளை கொள்வனவு செய்வதற்கு இணங்க வைக்க வேண்டும். இங்கு தான் மற்றவர்களை இணங்கச்செய்யும் திறன் முக்கியமாகின்றது. மக்களை இணங்க வைக்கக்கூடிய திறமையை வளர்த்துக்கொள்ள பின்வரும் குறிப்புகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

  1. Leicester பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வானது விலை மற்றும் கல் (Price & Stone)-2004 இன் நம்பிக்கையை வலியுறுத்தியுள்ளது. எவ்வாறென்றால், அதிக நம்பிக்கையுள்ள ஆலோசகர் மிகவும் திட்டவட்டமாக சரியான தீர்ப்புகளை வழங்குகிறார் மேலும், நன்கு அறிவார்ந்தவராவார். நீங்கள் எந்தவித ஆர்வமும் நம்பிக்கையும் இல்லாமல் மக்களை அணுக முயற்சித்தால், உங்கள் உற்பத்தியின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை நுகர்வோர் தெரிந்துகொள்கிறார்கள். பிறகு ஏன் அவர்கள் அவ் உற்பத்தியை வாங்க வேண்டும்? நியாயம் தானே?
  2. அதிக செல்வாக்குமிக்கவர்களாக இருங்கள்: நீங்கள் கூறுவதற்கு தகுதியானவர் என அவர்கள் நம்புவதற்கான காரணங்களை வழங்க வேண்டும். அந்த நம்பகத்தன்மை அல்லது செல்வாக்குமிக்க சக்தி இல்லாமல் நீங்கள் யாரையும் இலகுவில் இணங்க வைக்க மாட்டீர்கள். ஆகவே,களத்தில் சக்தி வாய்ந்த மற்றும் புலனாகும் தன்மை கொண்ட வலிமைமிக்க சுயவிவரத்தை உருவாக்குவதே இதற்கு தீர்வாக அமையும்.
  3. நீங்கள் இணங்க வைப்பதற்கு முயற்சிக்கும் நபரை புரிந்துகொள்ளுங்கள்: உங்கள் வாடிக்கையாளர்களுக்கு உற்பத்தி தொடர்பான தகவல்களை வழங்க முன், அவருக்கு உங்கள் உற்பத்தி மீது சிறிய ஆர்வம் இருக்கிறதா என்பதை சோதித்து பாருங்கள்.
    அவ்வாறு இல்லையெனில், நேரத்தை செலவிடுவதில் அர்த்தமில்லை. அவர்களின் மனநிலையையும், ஆர்வத்தையும் புரிந்துகொள்ளுங்கள். உங்களிடத்திலும், உங்கள் அணுகுமுறையிலும் மாற்றங்களை மேற்கொண்டு கனிவாக இணங்க வைக்க முயற்சியுங்கள்.
  4. அவசரப்படாமல் தெளிவாக பேசுங்கள்: உங்களுக்கான உரிய நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் யோசிப்பதற்கும் இடமளியுங்கள். இது தான் இணங்க வைப்பதில் வலுவான ஒரு முறை. இணங்க வைப்பது என்பது ஒரு நுட்பமான கலை. உங்கள் சொற்களை கவனமாக தேர்ந்தெடுங்கள், விளக்குவதற்கு தேவைப்பட்டால் காட்சி மற்றும் செவிப்புலன் கருவிகளை (Visual and auditory aids) பயன்படுத்துங்கள். நீங்கள் அவர்களுக்கு என்ன அறிவுறுத்துகிறீர்கள் என்பதற்கும், உங்கள் ஆலோசனையைப் பின்பற்றாவிட்டால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றியும் நடைமுறையில் உள்ள உதாரணங்களை எடுத்துக்காட்டுங்கள். நீங்கள் ஒருவரை இணங்க வைக்க வேண்டுமென்றால், ஆட்சேபனைகளை நிவர்த்தி செய்த பின் இதனை மேற்கொள்ள வேண்டும் என்று Cornell பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூறுகிறது. அதன் பின்னும் நம்பவில்லை என்றால், அவர்கள் எப்போதும் இணங்குவார்கள் என்பது அதிகளவில் சாத்தியமில்லை.
     

English (ஆங்கிலம்) தமிழ் மொழியில் படியுங்கள்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here