English (ஆங்கிலம்)
தமிழ் மொழியில் படியுங்கள்
நீங்கள் உங்களின் நிறுவனத்திற்கான அடுத்தடுத்த திட்டமிடலை தொடங்கிவிட்டீர்களா? நேரம் இல்லாததால் திட்டமிட தாமதப்படுத்துகிறீர்களா அல்லது அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் உள்ளீர்களா? சாத்தியமான அடுத்த நபர்களை நீங்கள் இன்னும் அடையாளம் காணவில்லையா அல்லது உங்களுக்கு பின் தொடர்பவரின் (Successor) திறன்கள் மற்றும் திறமைகளை பற்றி உறுதியாக தெரியவில்லையா? உரிமையை உங்கள் குழந்தைகளுக்கு கைமாற்றி விட வேண்டுமா அல்லது முகாமைத்துவத்திற்கு (Management), ஊழியர்களுக்கு அல்லது 3ஆம் தரப்பிற்கு அதை வழங்க வேண்டுமா? விரைவில் ஓய்வு பெறுவதால் அந்த ஊழியரின் பின்வரும் நபரை நீங்கள் அடையாளம் கண்டுள்ளீர்களா? 40% இற்கும் மேற்பட்ட கம்பனிகள் அல்லது அமைப்புக்கள் அவர்களின் அடுத்தடுத்த(Succession) தொடர்பாக எந்தவித திட்டமிடலும் மேற்கொள்ளவில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அது ஒரு அச்சுறுத்தலாக இருந்தாலும், உங்கள் அடுத்தடுத்த திட்டமிடலை தற்போது தொடங்குவது என்பது தாமதமான காரியமல்ல.
அடுத்தடுத்த திட்டமிடல் என்பது திறமைகள் மற்றும் ஆற்றல் கொண்ட ஊழியர்களை அடையாளம் கண்டுகொள்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முறை அல்லது உயர் மட்டங்களுக்கு அல்லது வெவ்வேறு நிலைகளுக்கு முன்னேற விசேட திறமைகளை உருவாக்கித் தரும் வாய்ப்பு ஆகும். மேலும், Succession இன் செயல்முறையினால் தொழிலாளர்கள் பலவீனமாக இருக்கக்கூடிய, செயல்படுத்தல் முடிவுகள் அல்லது செயல்திறன் முடிவுகளை மேற்பார்வையிடக் கூடிய மற்றும் மேம்படுத்தக்கூடிய வெவ்வேறு இடங்களை வேறுபடுத்த முடியும்.
அடுத்தடுத்த (Succession) திட்டமிடலின் போது ஒரு நிர்வாகத் தலைமை கருத்தில்கொள்ள வேண்டிய சில விடயங்கள் பின்வருமாறு:
அடிப்படை பங்குகளை (roles) அடையாளங்காணல்
அடுத்தடுத்த திட்டமிடலை நிறுவுவதற்கு (Succession planning) அடிப்படை பங்குகளை அடையாளங் காணுங்கள். இந்த பதவிகள் பூர்த்தி செய்யப்படாது இருப்பின், ஆட்சேர்ப்பு அல்லது மாற்றியமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், ஏனெனில் பூர்த்தி செய்யப்படாத பதவிகள் நிறுவனத்தின் வளர்ச்சியை எதிர்மறையாக பாதிக்கும். அடிப்படையில் அடுத்தடுத்த திட்டமானது நிறுவனத்தின் வணிக படிநிலையின் பிரதிபலிப்பாகும்.
சாத்தியமுள்ள திறன் மிகுந்த வாரிசுகளை (Successors) அடையாளங்காணல்
ஒரு குறிப்பிட்ட பதவிக்கு உயர் சாத்தியமுள்ள திறன் மிகுந்த ஊழியர் அடையாளம் காணப்படும்போது, அவர்களை சந்தித்து அவர்களின் பயிற்சி அல்லது வழிகாட்டுதல் திட்டங்களைப் பற்றி கலந்துரையாடுவது முக்கியமாகும். மறுபுறம், பொருத்தமான அடுத்தடுத்த (Succession) திட்டமிடல், பதவி உயர்வுக்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் கீழ்மட்டத்திலுள்ள ஊழியர்களை தக்கவைத்துக்கொள்வதை ஆதரிக்கும்.
பின் தொடர்வோர் நிறுவனத்திற்குள் இருந்தா அல்லது வெளியில் இருந்தா வர வேண்டும் என்பதை தீர்மானித்தல்
பெரும்பாலும் பின் தொடர்வோர், பல காரணங்களை அடிப்படையாகக் கொண்டு நிறுவனத்திற்குள் இருந்தே எழுகின்றனர். இதனால் ஆட்சேர்ப்பு மற்றும் உள்நுழைவு செலவுகள் குறையும், மற்றும் அந்நபர் நிறுவனத்தின் சூழலிற்கு மிகவும் பரீட்சியமானவராகவும், வெளியிலிருந்து வரும் நபரை விட வினைத்திறன் மிக்கவராகவும் இருப்பார். இருப்பினும், அக்குறித்த பதவிக்கு தகுதியான நபர் நிறுவனத்திற்கு உள்ளே இல்லாத பட்சத்தில், வெளியிலிருந்து அதற்கான நபரை நியமிக்க வேண்டியதாக இருக்கும். உயர் நிர்வாக மட்டங்களில் அவசர வாரிசு / உயர் மேலாளர் நிலைகளில் மாற்றீட்டை கருத்தில் கொள்ளும்போது அல்லது குறிப்பிட்ட திறன்கள் தேவைப்படும்போது, ஒரு உள் வாரிசைக் கண்டுபிடிப்பதை விட வெளிநபர் மிகவும் பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில், ஏற்கனவே இருக்கும் ஊழியர் பயிற்சி அல்லது தன்னை ஒரு திறமையான தலைவர் அல்லது பங்களிப்பாளராக மாற்றிக் கொள்ளும் ஒரு செயல்முறையின் வழியாக செல்ல வேண்டும். அதேசமயம் ஒரு குறுகிய காலத்தில் எதிர்பார்க்கப்படும் பண்புகளுடன் வெளிப்புற நபரை நியமிக்க முடியும்.
சிறப்பாக செயற்படுபவர்களுக்கு பயிற்சி வழங்குதல்
சிறப்பாக செயற்படுபவர்களை கண்டறிந்ததும், புதிய திறன்களை வளர்ப்பதற்கும், ஏற்கனவே இருப்பவற்றை செம்மைப்படுத்துவதற்கு உதவும் வகையில் பயிற்சி இணைப்புக்கள், Work shadowing மற்றும் தயாரிப்புக்களை வழங்குங்கள். சிறந்த தலைவர்களுக்கு சிறந்த நுண்ணறிவு மற்றும் சிறந்த வாய்மொழி, எழுத்துமூல தொடர்பாடல் திறமைகள் இருக்க வேண்டும் என்பதனை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
திறந்த மனப்பாங்கை பேணுங்கள் மற்றும் உங்கள் நோக்கத்தை தெரியப்படுத்துங்கள்
உயர் பதவிகளில் நிலைத்திருப்பதற்கு, நபர்களின் தற்போதைய நிலைக்கு கொஞ்சம் கவனம் செலுத்தி, சிறந்த தகைமைகளை வெளிகாட்டக்கூடிய தனிநபர்களை தேடுங்கள். உங்கள் தொடர்முறை முன்னேற்ற ஏற்பாட்டை மனித வளத்துறையினருடன் (HR) மற்றும் உங்கள் உயர் நிர்வாக ஊழியர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
சாத்தியமுள்ள தலைவர்களை வேறுபடுத்துவதன் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்வதனாலும், அடுத்தடுத்த திட்டமிடலை(Succession Planning) கட்டியெழுப்புவதன் மூலமும், அதிக திறன் கொண்ட ஊழியர்கள் தாங்கள் ஆற்றும் கடமைகளுக்கு மதிப்பளிப்பதாக உணரச்செய்கிறீர்கள் அதேநேரம் திறமைகளை வெளிக்கொணரவும் உதவுகிறீர்கள்.
English (ஆங்கிலம்)
தமிழ் மொழியில் படியுங்கள்