spot_imgspot_img

உங்கள் விற்பனை முனைப்புகளை கொள்வனவுகளாக மாற்றவும்

நீங்கள் முயற்சி செய்யும் ஒவ்வொரு விற்பனை முனைப்பும் தோல்வியில் முடிவடைவதைப் போல் உணர்கிறீர்களா? வாய்ப்புகள் போதுமான அளவில் வாடிக்கையாளர்களாக மாறவில்லையா? நீங்கள் ஒரு சிறிய தந்திரத்தை கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, சிறந்த விற்பனை முனைப்புக்களில் கவனம் செலுத்துவது வெற்றியை அதிகரிக்க வழிவகுக்கிறது.

நீங்கள் எப்போதாவது ஒரு கடைக்குச் சென்றிருக்கிறீர்களா, அதில் கடையின் உரிமையாளர் உங்களுக்கு வீட்டில் உள்ளதைப் போல சௌகரியத்தை உணரச் செய்தாரா? காலம்காலமாக பின்பற்றப்படுகின்ற “வாழ்க்கை எப்படி போகிறது?” மற்றும் “காலை வணக்கம் ஐயா, நீங்கள் எதை வாங்க முயற்சிக்கிறீர்கள்?” போன்றவை சிநேகபூர்வமான வாழ்த்துக்களுக்கு உதாரணங்கள். நீங்கள் புறக்கணிக்கப்பட்ட மற்றும் முகம் சுளிக்கின்ற கடையை பார்ப்பதை விட, மேற்குறிப்பிட்ட வகையில் அத்தகைய கடையைப் பார்க்க நாம் அனைவரும் மிகவும் விரும்புகிறோம், இல்லையா? சரி, இது அடிப்படையில் உறவுமுறை சந்தைப்படுத்தல். உங்கள் வாடிக்கையாளர்கள் அல்லது விற்பனை முனைப்புக்களுடன் நீங்கள் உறவுமுறையைக் கட்டியெழுப்பும்போது. அவர்கள் வாடிக்கையாளர்களாக மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். முதலில், உங்கள் வாடிக்கையாளர்களுடனான உறவை மேம்படுத்துவதற்கான சில எளிய வழிமுறைகளைப் பற்றி கலந்துரையாடுவோம்.

தரமான வாடிக்கையாளர் சேவையை வழங்குங்கள்: எப்படி கேட்பீர்கள்? நாம் அறிந்துகொள்வோம். சரி, பெயர் குறிப்பிடுவது போலவே, தரமான வாடிக்கையாளர் சேவை என்பது வாடிக்கையாளருடன் தனிப்பட்ட மட்டத்தில் தொடர்புகொள்வது மற்றும் உங்கள் வாடிக்கையாளர்களாக ஆவதற்கு அவர்களை சாதகமாக வலுப்படுத்துவதாகும். இதை எப்படி செய்வது என்பதற்கான சில எளிய உதவிக்குறிப்புகளைத் தருகிறேன்.

  • வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளில் உண்மையாக ஆர்வம் செலுத்துபவராக இருங்கள்: “வாடிக்கையாளர் ஒரு ராஜா” எனும் மிகவும் பிரபலமான பழமொழியை நினைவில் கொள்ளுங்கள். எனவே, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள், தேவைகள் மற்றும் விருப்பங்களை நீங்கள் உண்மையாக ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதை உறுதிசெய்வது உங்கள் கடமையாகும். இது அவர்கள் மேலும் உங்களை நாடி வரும் தேவையை ஏற்படுத்தும்.
  • ஒரு எளிய புன்னகை நீண்ட பலனைத் தரும்: உங்கள் கடைக்குள் வரும் வாடிக்கையாளர்கள், உங்கள் கடைக்குள் நுழையும் போது, நீங்கள் ஒரு விரும்பத்தகாத முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க விரும்பமாட்டீர்கள். அவர்களுடன் வியாபாரம் செய்ய விரும்பும் ஒரு நபரை, அதாவது மகிழ்ச்சியான முகம், உற்சாகமான ஒரு நபரைப் பார்க்க விரும்புகிறார்கள். எனவே, புரூஸ் வெய்ன்ஸின் பரம விரோதி “மகிழ்ச்சியான முகத்தை காண்பியுங்கள்” என்று கூறுவார். இது உங்கள் கடையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் நிறுவனத்தை நீங்கள் எங்கு பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்களோ, அது ஒரு கூட்டமாகவோ, மாநாடாகவோ அல்லது வணிக ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொள்வதற்கான முன்மொழிவாகக் கூட இருக்கலாம், “மகிழ்ச்சியான முகத்துடன் நடவுங்கள்”, இந்த எளிய உடல்மொழி சைகை உங்கள் நிறுவனத்திற்கு தற்போதைய விற்பனை மற்றும் எதிர்கால வாய்ப்புகளின் அடிப்படையில் நீங்கள் நினைப்பதை விட அதிக அளவில் உதவும். மேலும், இது உங்கள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விம்பத்தையும் பலப்படுத்தும்.
  • சிநேகபூர்வமான மின்னஞ்சல் அல்லது செய்தி எவரையும் காயப்படுத்தாது: உங்கள் வாடிக்கையாளர்களின் தொலைபேசி இலக்கங்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிகள் உங்களிடம் இருக்கலாம் அல்லவா? அவர்களின் பிறந்தநாள் அல்லது வேறு ஏதேனும் விசேட நிகழ்வுகளை நீங்கள் அறிந்தால், அவர்களுக்கு ஒரு வாழ்த்தை அனுப்பி வையுங்கள். இது வாடிக்கையாளருடன் உங்கள் நிறுவனம் வைத்திருக்கும் உறவை இன்னும் மேம்படுத்தும். இருப்பினும், டிஜிட்டல் யுகத்தில், அனைத்து தனியுரிமை தொடர்பான அக்கறைகளுடனும், இது அனைவருக்கும் சாத்தியம் இல்லாமல் போகலாம். எனவே, நீங்கள் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல் விபரங்களைக் கொண்டு உறவைக் கட்டியெழுப்பப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அத்தகைய தகவல் விபரங்களை தகவல்தொடர்புகளுக்குப் பயன்படுத்த அவர்களின் முன் அனுமதியைப் பெற்றுக்கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது எப்போதும் சிறந்தது. நூற்றுக்கணக்கான விளம்பரச் செய்திகள் மூலம் அவர்களுக்கு இடையூறு செய்து, உங்களைத் தடுக்கும்படி அவர்களைக் கட்டாயப்படுத்தாமல் இருக்கவும்.

இவை அனைத்தும் மிகவும் எளிமையான விடயங்களாகத் தோன்றுகின்றன, இல்லையா? சரி, உண்மை தான். இருப்பினும், இந்த மிகவும் சிறிய குறிப்புகளை நடைமுறையில் எடுத்துக்கொள்வது அவ்வளவு பொதுவானதல்ல. ஒரு வாடிக்கையாளரின் கடினமான நாளில் நீங்கள் அவருக்குக் கொடுக்கும் ஒரு எளிய புன்னகை அவர்களை உங்களின் மிகவும் விசுவாசமான வாடிக்கையாளர்களாக மாற்றும். இதன் மூலமாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும் என்பதை மறக்க வேண்டாம்.  

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X