English (ஆங்கிலம்) தமிழ் மொழியில் படியுங்கள்

ஒரு குடும்ப வணிகம் என்பது வணிகங்களின் பழமையான வடிவங்களில் ஒன்றாகும். இது ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களை சார்ந்துள்ளது. எனவே இது குடும்பம் மற்றும் வணிகம் ஆகிய இரண்டு அமைப்புகளின் குறுக்குவெட்டு ஆகும் – நிறுவனர் குடும்பம் மற்றும் வணிகம்உரிமையின் பெரும்பகுதி குடும்ப உறுப்பினர்கள், வாழ்க்கைத் துணைவர்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள், உறவினர்கள், பங்குதாரர்கள், மேலாளர்கள், இயக்குநர்கள் குழு, ஆலோசகர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரை சாரும்.

குடும்ப வணிகங்களின் உரிமையாளர்கள் வழக்கமாக பல தசாப்தங்களாக தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு  உரிமையை கடந்து செல்வது ஒரு ஆசீர்வாதமாக இருக்கும், ஏனெனில் இது அத்தகைய குடும்பங்களை அன்றாட வாழ்க்கையில் நெருக்கமாகக் கொண்டுவருகிறதுமற்ற வணிகங்களை விட குடும்ப வணிகங்கள் மிகவும் நெகிழக்கூடியவை என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வணிகத்தை கட்டியெழுப்பவும், அவை பெற்றதை விட சிறந்த நிலையில் அடுத்த தலைமுறைக்கு அனுப்பவும் உரிமையாளர்கள் உறுதியுடன் இருக்கும்போது இது நிகழ்கிறதுஇத்தகைய நிகழ்வுகள் பாரம்பரியம் மற்றும் மாற்றத்தின் சரியான சேர்க்கைகள் ஆகும்இருப்பினும், குடும்ப வணிகங்களும் சில நேரங்களில் தொந்தரவாக இருக்கும்குடும்ப வணிகங்களில் காணப்படக்கூடிய பொதுவான சில சவால்கள் பின்வருமாறு:

பெரும்பாலும் வெளியாட்களால், தகுதி அடிப்படையிலன்றி
சொந்த பந்தங்கள் உறவுக்காரர்களுக்காக உயர் பதவிகள் கொடுப்பதாக குற்றம் சாட்டப்படல் 

குடும்ப வணிகங்களில், பெரும்பாலான நேரம் குடும்ப உறுப்பினர்களுக்கு உரிமையாளருடனான உறவின் அடிப்படையில் அவர்களுக்கு வேலைகள் வழங்கப்படுகின்றனகுடும்பமல்லாத உறுப்பினர்களை  பணியமர்த்தும் பொழுது, ‘குடும்ப வாரிசுகளை’ விட  தங்களுக்கு திறமை உள்ளது என்பதை அவர்கள் தொடர்ந்து அடிக்கடி நிரூபிக்க வேண்டும், இல்லையெனில் அவர்கள் பெற்ற சலுகைகள் மற்றும் பதவி உயர்வு  போன்றவற்றை அவர்கள் ‘தட்டி பறித்துக்கொள்வார்கள்’ என்ற உணர்வு அவர்களுக்கு இருக்கும். இது நடப்பதைத் தடுக்க, குடும்ப வணிகங்களின் உரிமையாளர்கள் குடும்பமல்லாத உறுப்பினர்களுக்கு நியாயமான கொள்கைகளை அமுல்படுத்த வேண்டும்குடும்ப உறுப்பினர்கள் வியாபாரத்தில் விரைவான பதவிநியமனம் செய்யப்படாமல், முறையான திட்டத்துடன் படிப்படியாக வணிகத்திற்கு அறிமுகப்படுத்தப்படுவது முக்கியம்புதிய குடும்ப உறுப்பினர்கள் வணிக களத்திலும், தற்போதுள்ள பணியாளர்களிடமும் நல்ல புரிதலுடன் வணிகத்தில் சேருவதும் முக்கியம்.

வாரிசு தொடர்பான பிரச்சினைகள்

“அடுத்து நிறுவனத்தை யார் கைப்பற்றப் போகிறார்கள்? “

முடிந்தவரை விரைவாக இதை  தீர்மானிப்பது, அடுத்த தலைமுறையின் சீர்ப்படுத்தலுக்கு அதிக நேரத்தையும் இடத்தையும் தருகிறது. இது நிறுவனத்திற்குள்ளான செயல்முறைகளை அனுபவிப்பதற்கும், அதற்கேற்ப மாற்றியமைப்பதற்கும் அவர்களுக்கு உரிமையைக் கொடுக்கும்இருப்பினும், அதை நிர்ணயிக்கும் போது ​​குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குடும்பமல்லாத உறுப்பினர்களுக்கிடையில் மோதல் ஏற்படக்கூடும்நீங்கள் குடும்பத்திற்கு முதலிடம் கொடுக்கப்போகிறீர்களாவணிகப் பொறுப்பு அடுத்தடுத்த குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே உரியதா?  குடும்பமல்லாத உறுப்பினர்களின் தகுதிகள் மற்றும் அனுபவம் மதிக்கப்படமாட்டாதா? எனும் கேள்விகள் எழலாம் 

 இந்த சிக்கலை நாங்கள் எவ்வாறு கையாள்வதுசில குறிப்புகள் இங்கே:

  • அனைத்து விஷயங்களையும் ஒரு நிதானமான மற்றும் குழப்பமற்ற சூழலில் விவாதிக்க மற்றும் ஏற்றுக்கொள்வதற்காக குடும்ப ஓய்வுகள் ஒழுங்கமைத்தல்.
  • முன்னதாகவே புதிய தலைமுறையை தயாரித்தல்
  • நடுநிலையாக கூட்டங்களை நடாத்தல் 

உணர்வுகளையும் வியாபாரத்தையும் வேறுபடுத்தி கையாளல்

அனைத்து எதிர்மறை மற்றும் நேர்மறையான விஷயங்களிலும் குடும்ப உறவுகளை வணிகத்திலிருந்து பிரிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதுஉதாரணமாக,உங்களுடைய குடும்ப உறுப்பினர் ஒருவர் கடினமான நேரத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார் என்றால், அவருக்கு வேலையில் சற்று நெகிழ்வுத்தன்மையை வழங்குவதை கருத்தில் கொள்ளலாம், இது தொழில்முறை முடிவுகளை பாதிக்கலாம்இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களிடையே கருத்துக்கள் பொருந்தவில்லை என்றால், அவர்கள் விடுமுறை நாட்களில் அல்லது இரவு உணவு உண்ணும் வேளையில் கூட  முரண்படக்கூடும். நீங்கள் ஒரு குடும்ப வணிகத்தை வைத்திருந்தால், வேலை நேரத்தில் உணர்ச்சி ரீதியான இணைப்புகளை ஒதுக்கி வைப்பதன் முக்கியத்துவத்தை நீங்கள் உணர வேண்டும் மற்றும் குடும்ப நேரத்தில் வேலைப்பேச்சுக்களை ஒதுக்கி வைக்க வேண்டும்.

குடும்ப வணிகங்கள் நுண்ணிய, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் திடமான அடித்தளம் ஆகும். மேலும், உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, சில குடும்ப வணிகங்களாக இருக்கின்றன. அவை எவ்வளவு முக்கியம் மற்றும் முக்கியமானவை என்பதையும், இந்த வணிகங்கள் வழங்கக்கூடிய ஆற்றலையும் இது காட்டுகிறது. குடும்ப உறவுகளை நிர்வகித்தல், குடும்பமல்லாத உறுப்பினர்களின் திறமைகளை நோக்கி நியாயமாக செயல்படுதல், வணிகத்திற்கு எது சிறந்தது என்பதில் கவனம் செலுத்துவது மற்றும் அனைவரும் அனைத்து தரப்பினரிடமும் மிகுந்த பச்சாதாபத்துடன் இருப்பது ஆகியவை வணிகங்கள் வளர உதவும்.

 

English (ஆங்கிலம்) தமிழ் மொழியில் படியுங்கள்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here